மேலும் அறிய

Thug Life Trailer : ரெடியா மக்களே... கமலின் தக் லைஃப் படத்தின் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா...?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் வரும் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தக் லைஃப்

மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. கமலின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக நாயகன் படம் அமைந்தது. இதற்கு பின் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் அடுத்தபடத்தை ரசிகர்கள் பல வருடங்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். 

கமலின் 234 ஆம் படமாக உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முன்னதாக ஜெயம் ரவி , துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இருவரும் படத்தில் இருந்து விலகி சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் படப்பிடிப்பில் இணைந்தார்கள். இவர்கள் தவிர்த்து த்ரிஷா , அபிராமி , ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். டெல்லி , சென்னை , புதுச்சேரி , சைபீரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 

கமல் பிறந்தநாளுக்கு வெளியாகும் தக் லைஃப் படத்தின் டிரைலர் 

இந்த ஆண்டு டிசம்பருக்குள்ளாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டதால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் படம் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தக் லைஃப் படத்தின் டிரைலர் வரும் நவம்பர் மாதம் வெளியாக இருப்பதாகவும் கமலின் பிறந்தநாளான  நவம்பர் 7 ஆம் தேதி டிரைலரை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்கள் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார்கள். சென்ற முறை நாயகன் என்கிற காலத்திற்கும் அழியாத ஒரு படத்தை கொடுத்த இந்த கூட்டணி இந்த முறை எந்த மாதிரியான ஒரு கதையோடு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் இருக்கிறது.  குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்பட கமல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்த நிலையில் தக் லைஃப் படத்தில் கமல் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Embed widget