Drugs அடித்துவிட்டு நடிகர் செய்த செயல்... ஷாக் கொடுத்த இளம் மலையாள நடிகை வீடியோ
சக நடிகர் ஒருவர் போதைப் பொருட்களை பயண்படுத்திவிட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக பிரபல மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் தெரிவித்துள்ளார்

வின்ஸி அலோசியஸ்
இளம் மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் அதிர்ச்சியை கிளம்ப்பும் விதமான தகவல் ஒன்றை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பு ஒன்றின் போது தன்னுடன் நடித்த சக நடிகர் போதைப் பொருட்களின் பயண்பாட்டில் இருந்ததாகவும் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
தகாத முறையில் நடந்துகொண்ட மலையாள நடிகர்
"படப்பிடிப்பின் போது என்னுடைய ஆடையில் ஏதோ திருத்தம் இருந்ததாக அவர் சொன்னார். நான் அதை மாற்ற கேரவான் சென்றபோது அவருடம் என்னுடன் வந்து உதவி செய்வதாக எல்லார் முன்னாலும் சொன்னார். இது அந்த நிலைமையை இன்னும் அசெளகரியமாக்கியது. பின் படப்பிடிப்பின் போது அவரது வாயில் இருந்து வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று டேபிளில் விழுந்தது. அதை பார்த்து அவர் போதைப் பொருள் பயண்பாட்டில் இருக்கிறார் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அன்றில் இருந்து போதைப் பொருள் பயண்படுத்துபவர்களுடன் நடிப்பதில்லை என நான் முடிவு எடுத்திருக்கிறேன். போதைப்பொருளை பயண்படுத்துவது என்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால் இது ஒருவரின் பணியிடத்தை பாதிக்கும்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நான் வாய்ப்புகளை இழக்க நேரலாம். ஆனால் ஒருவரை போதைப் பொருட்களின் பயன்பாட்டில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவருடன் நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்.
View this post on Instagram
மலையாள திரையுலகில் தொடரும் குற்றங்கள்
மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப் பொருட்களின் பயண்பாடுகள் அதிகரித்து வருவதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக பேச முன்வந்தார்கள்.

