Dhanush : எதிர்பார்ப்புகளை கூட்டும் மகாராஜா இயக்குநரின் அடுத்த படம்! மீண்டும் இணையும் தனுஷ் நயன் கூட்டணி?
மகாராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
நிதிலன் ஸ்வாமிநாதன்
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா (Maharaja) படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி, பாரதிராஜா, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம், ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இப்படத்தின் மூலம் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்.
கடந்த 2017ஆம் ஆண்டு பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நிதிலன் ஸ்வாமிநாதன். வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்களே நீளம் கொண்ட இந்தப் ப இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் கவனமீர்த்தார்நித்திலன் சுவாமிநாதன். இவர் முன்னதாக நாளைய இயக்குநர் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இதில் இறுதிச் சுற்றில் இவர் இயக்கிய “புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்” என்ற படம் நாளைய இயக்குநர் டைட்டில் பரிசை வென்றது. மகாராஜா படத்திற்கு பின் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் நிதிலன் ஸ்வாமிநாதன் அடுத்தபடியாக நடிகை நயன்தாரா வைத்து படம் இயக்கவிருப்பதாக சில நாட்கள் முன்பாக தகவல் வெளியானது. இப்படத்திற்கு மகாராணி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
மகாராஜா இயக்குநருடன் இணையும் தனுஷ்
#Maharaja director #Nithilan has narrated a story to #Dhanush. Dhanush has also liked & agreed to do the movie👌🔥 ©️VP
— AmuthaBharathi (@CinemaWithAB) August 27, 2024
Meanwhile Director Nithilan has Nayanthara movie in his Line-up & Dhanush also has big Lineups🤝 pic.twitter.com/B9nck1zGEw
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நயன்தாராவுடன் மற்றொரு படத்திற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்தப் படத்திற்கு மகாராணி என்பது டைட்டில் இல்லை எனவும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.