Madhavan - Parthiepan movie at Oscars : ஆஸ்கார் விருது பட்டியலில் சேர்ந்த மேலும் இரண்டு இந்திய படங்கள்... பார்த்திபன் - மாதவனுக்கு குவியும் பாராட்டுக்கள்
நடிகர் மாதவனின் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ மற்றும் பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படங்கள் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. நடிகர் மாதவன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மாதவன் உற்சாகம் :
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. இப்படம் ஆஸ்கார் விருதுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து தனது நன்றியுணர்வையும் உற்சாகத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் மாதவன். விஞ்ஞானி நம்பி நாராயணனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்படம் மூலம் நான் ஒரு எழுத்தாளராகவும், இயக்குனராகவும் மாறுவேன் என நினைக்கவே இல்லை. தற்போது இது ஆஸ்கார் விருதுகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களில் ஒன்றாக தேர்ந்து எடுக்கப்பட்டதை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.
Congratulations @rparthiepan @ActorMadhavan https://t.co/DIvYjHsYvg
— Seenu Ramasamy (@seenuramasamy) January 10, 2023
கவனத்தை ஈர்க்கும் பார்த்திபனின் போஸ்ட் :
மேலும் நடிகர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படமும் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து பார்த்திபன் தனது வழக்கமான பணியில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரவின் நிழல் திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான எலிஜிபில் லிஸ்டில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதுவே இந்த எளியவனுக்கு கிடைத்த பெரிய வரம். ஆனால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு வெற்றி வாய்ப்பு வெளிச்சமாக இருப்பது அனைவருக்கும் பெருமையே. ஆனால் அதற்காக மிகுந்த செலவில் ஏஜென்சிகள் மூலம் அங்கு விளம்பரம் நடைபெறுகிறது என்பது உலகறிந்த உண்மையே என பதிவிட்டு இருந்தார்.
அந்த மஹா சமுத்திரத்தில் இந்த எளியவனின் படம் எலிஜிபில் லிஸ்ட் வரை வந்ததே வரம் தான்.அதுவும் ஒரு R (upee) கூட செலவழிக்காமல், RRR-க்கெல்லாம் பல cR செலவழித்து campaign செய்கையில்!!! https://t.co/PLMuiIeHap
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 10, 2023
பிரபலங்கள் வாழ்த்து :
நடிகர் மாதவனின் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் மற்றும் பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுகளின் பட்டியலில் இடம் பெற்றதற்கு இயக்குனர் சீனு ராமசாமி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்களும் நடிகர்களுக்கு வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் குவித்து வருகிறார்கள்.
ஆஸ்கார் விருதுகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன. வரும் ஜனவரி 24ம் தேதி அன்று ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதி பட்டியல் வெளியாகும். ஆனால் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள் அனைத்துமே இறுதி பட்டியலில் இடம் பெரும் என்பது நிச்சயமில்லை.