Maaveeran: ரசிகர்களுக்கு ட்ரீட்: விறுவிறுப்பாக நடக்கும் ‘மாவீரன்’ போஸ்ட்-புரொடெக்சன் பணிகள்; படக்குழு வெளியிட்ட அப்டேட்!
Maaveeran: சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் ஜூலை மாதம் 14- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மாவீரன் திரைப்படத்திற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் ஈடுப்பட்டுள்ள வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் ‘மாவீரன்’ திரைப்பட ரிலீஸிற்காக காத்திருக்கும் நிலையில், படக்குழுவினரின் இந்த அப்டேட் அவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரன் திரைப்படம்:
தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் ’மடோனா அஸ்வின்’ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாவீரன் ‘. இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் நடிகை சரிதா, நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் தான் மாவீரன் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. ஆடை , மண்டேலா ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் பரத் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவீரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Marching ahead💪 @Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #Maaveeran #Mahaveerudu#VeerameJeyam 💪🏼@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @dineshmoffl @SunTV… pic.twitter.com/B58a26D7NC
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 29, 2023
இதனால் சுதந்திர தின விடுமுறைகளை குறிவைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆவதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக அதிநவீன மோகோபாட் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது போன்ற அதிநவீன மோகோபாட் கேமராக்கள் 'விக்ரம்' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
’மாவீரன்’ ரிலீஸ்:
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள மாவீரன் ஜூலை மாதம் 14- ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் டப்பிங்:
இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் வீடியோவை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.