SJ Surya Tweet: ப்ளீஸ் ரெஸ்ட் வேணும்... எஸ்.ஜே. சூர்யாவின் ரகளை ட்வீட்
SJ Surya Tweet on Maanaadu Dubbing: மாநாடு படத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென தீபாவளி ரேஸிலிருந்து விலகி நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சிம்பு டப்பிங் பேசும் வீடியோவும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் மாநாடு படத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “'மாநாடு' படத்தில் என் கதாபாத்திரத்துக்காக 8 நாட்களில் முடிக்க வேண்டிய டப்பிங்கை 5 நாட்களில் முடித்திருக்கிறேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகுத் தண்டு, என் தொண்டை என அனைத்தும் உடைந்துவிட்டன.
குறைந்தது 10 நாட்களாவது ஓய்வு கொடு என்று அவை என்னிடம் கெஞ்சுகின்றன. கடுமையான வேலை, அவ்வளவு வலி. ஆனால், கடைசியில் படத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது, உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான். நவம்பர் 25தான்டா தீபாவளி" என பதிவிட்டுள்ளார்.
I almost covered 8days dubbing work of mypart for “MAANAADU”,in 5 https://t.co/a16iyxQQZQ naadi,narambu,neck,back,spine and throat are gone& begging me to give minimum10days rest(heavy work-valli pinnudhu)BUTafter seeing the out-put , tell U all one thing DIWALI NOV25TH THANDA👍
— S J Suryah (@iam_SJSuryah) October 26, 2021
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்தர், ‘மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். சிம்புவுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது. அவருக்கு நெருக்கடி கொடுக்கவே மாநாடு முடக்கப்பட்டுளது. மாநாடு படத்தை வெளியிடாவிட்டால் நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் வீட்டு முன் உண்ணாவிரதம இருப்போம்’என கூறி பரபரப்பை பற்றவைத்தார்.
இதனையடுத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் சிம்பு மீதும் அவரது தந்தை, தாய் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்