மேலும் அறிய

Maamannan Twitter Review: உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ எப்படி? ஃபகத்தின் வில்லத்தனம் தெறி.. ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Maamannan Movie Twitter Review: நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படம் இன்று வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Maamannan Movie Twitter Review: நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படம் இன்று வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனம் பெற்ற இயக்குநரானார் மாரி செல்வராஜ். இவர் தற்போது மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.மாமன்னன் படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்டோரும் இப்படத்தில் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

படத்தின் அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்தது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் கவின், சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் படத்துக்கு தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. மாமன்னன் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. 

முன்னதாக நடிகர் தனுஷ் மாமன்னன் படம் பார்த்து விட்டு, ‘இடைவேளை காட்சியில் தியேட்டர் தெறிக்கும்’ என கூறியிருந்தார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும், “மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.  என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார். இதனால் படத்தின் மீதான நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. இப்படியான நிலையில் பலரும் முதல் காட்சி படம் பார்த்து விட்டு தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை நாம் இந்த செய்தியில் இணைத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இது பதவி இல்ல.. பொறுப்பு" இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி.. எமோஷனலான அனுரா குமார திசாநாயக்க!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடிSchool Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!Anura Kumara Dissanayake | இலங்கை அதிபராகும் கூலித்தொழிலாளியின் மகன்!யார் இந்த AKD?Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இது பதவி இல்ல.. பொறுப்பு" இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி.. எமோஷனலான அனுரா குமார திசாநாயக்க!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்று அசத்திய இந்தியா!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க வெற்றி!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
Kerala Nipah Virus: கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா தொற்று உறுதி.! தமிழ்நாட்டு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்.!
சென்னையில் விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. வந்தது செம்ம அப்டேட்!
சென்னையில் விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. வந்தது செம்ம அப்டேட்!
"வெங்கடாஜலபதி மன்னிச்சுடு" திருப்பதி லட்டு விவகாரம்.. விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்!
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - யார் இந்த சீன ஆதரவாளர், இந்தியாவிற்கு?
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!
Embed widget