Maamannan LIVE: மாமன்னன்.. மக்களின் மன்னன்.. கொண்டாடும் ரசிகர்கள்.. மாமன்னன் அப்டேட்ஸ் இங்கே உடனுக்குடன்
Maamannan Movie LIVE Updates: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் குறித்த தகவல்களை நாம் உடனுக்குடன் இங்கு காணலாம்.

Background
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் இன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் மாமன்னன் படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தொடர்ந்து ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் சில நாட்கள் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து மாமன்னன் படமானது ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி மாமன்னன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், கவின், சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஜூன் 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இசை வெளியீட்டு விழாவானது சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியானது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி மாமன்னன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடந்து வரும் நிலையில் படத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று மாமன்னன் படம் வெளியாகவுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை அதிகம் இருக்கும். இதனால் படத்தின் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன்.. மக்களின் மன்னன்.. சம்பவம் செய்த மாரி செல்வராஜ்
Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!#MAAMANNAN #FahadhFaasil #UdhayanidhiStalin #Vadivelu #MariSelvaraj https://t.co/qAgrXJGabE
— ABP Nadu (@abpnadu) June 29, 2023
மாமன்னன் திரைப்படத்துக்கு ட்விட்டரில் நேர்மறை ரிவ்யூக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றன
மாமன்னன் திரைப்படத்துக்கு ட்விட்டரில் நேர்மறை ரிவ்யூக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றன





















