மேலும் அறிய

எம் எஸ் பாஸ்கர் நடிக்கும் கிராண்ட் ஃபாதர் படப்பிடிப்பு நிறைவு

எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

எம்.எஸ் பாஸ்கர் நடிக்கும் கிராண்ட் ஃபாதர்

 ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம்  சேர்ந்து,  ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில்,  ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி  நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ செய்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவு

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக   45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தை அறிவித்த வேகத்தில், குறுகிய காலகட்டத்தில்  முழு படப்பிடிப்பையும் முடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.

ஒளிப்பதிவாளர் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள  இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க,  கலை இயக்கத்தை பிரேம் மேற்கொண்டுள்ளார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி பெரும் பொருட்செலவில் மிக தரமான ஒரு படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் தனது எளிமையான, அனைவரும் கொண்டாடும்  பிராங் வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை வென்றுள்ளார். அந்த வீடியோவைப் போலவே அதே நேர்மையும் உண்மையும் கொண்டு உருவாக்கப்படும் அவரது முதல் படம் “ கிராண்ட் பாதர் “  படமும்  பார்வையாளர்களுடன் ஆழமாக இணைந்து, பலரது இதயங்களில் ஒரு தனித்த இடத்தைப் பெறும்.

இளம் தயாரிப்பாளரான புவனேஷ் சின்னசாமி, இளம் இயக்குநர் பிராங்க்ஸ்டர் ராகுல் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்து தகவல்கள் விரைவில்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும்..

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
Embed widget