ரஜினி கமலை அன்ஃபாலோ செய்த லோகேஷ் கனகராஜ் ? என்ன காரணம் தெரியுமா ?
லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை ரஜினி மற்றும் கமல் மறுத்ததால் கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் இருவரையும் சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

கூலி படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவார் என பலர் எதிர்பார்த்த நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை சுந்தர் சி இயக்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. லோகேஷ் கனகராஜ் ரஜினி கமலுக்காக சொன்ன கதையில் உடன்பாடில்லாததால் இந்த கதையை இருவரும் மறுத்ததாகவும் இதனால் லோகேஷ் கனகராஜூடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினி கமல் இருவரையும் எக்ஸ் தளத்தில் அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது
தொடர் விமர்சனங்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ்
அண்மை காலங்களில் ரசிகர்களால் உச்சத்தில் வைத்து கொண்டாடப்பட்ட இயக்குநராக லோகேஷ் கனகராஜ் இருந்து வந்தார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் கூலி படத்திற்கு பின் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கூலி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தாக்கத் தொடங்கினர். இப்படியான நிலையில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. கொரோணா நோய்த் தொற்றுக்கு முன்பே ரஜினி கமலை வைத்து படமியக்கவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து பின் கைவிடப்பட்டன.
சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி
இப்படியான நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்கிற படத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவார் என பலர் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியது. லோகேஷ் ரஜினி கமலுக்கு சொன்ன கதையில் இருவருக்கும் உடன்பாடு இல்லாததால் இந்த கதையை இருவரும் மறுத்துவிட்டதாகவும் இதனால் இரு தரப்பினர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி கமலை அன்ஃபாலோ செய்த லோகேஷ் ?
இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரை எக்ஸ் பக்கத்தில் அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது. இதற்கு முன்பாக லோகேஷ் இருவரையும் சமூக வலைதளத்தில் ஃபாலோ செய்யவில்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.





















