பிராண்டாக மாறிய லோகேஷ் கனகராஜ்... அடுத்த படத்திற்கு கூலிக்கு வாங்கியதை விட இரு மடங்கு சம்பளமா!
கூலி படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பி பிரம்மாண்ட சைன்ஸ் பிக்ஷன் படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக தனது சம்பளத்தை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கோலிவுட்டின் அதிகம் கொண்டாடப்பட்ட இயக்குநராக இருந்த வந்த லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்கு பின் பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டார். அடுத்தபடியாக அவர் இயக்கவிருந்த கைதி திரைப்படம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் அதிகப்படியான சம்பளம் கேட்டதாகவும் ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பாளர் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் நாயகனாக நடித்து வரும் லோகேஷ் அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்
அல்லு அர்ஜூன் நடிக்கும் இரும்பு கை மாயாவி
லோகேஷ் கனகராஜின் இரும்பு கை மாயாவி படத்தில் தற்போது அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சூர்யா , ஆமிர் கான் ஆகிய நடிகர்களுடன் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் கூலி படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றதால் ஆமீர் கான் இப்படத்தில் இருந்து விலகினார். இனால் தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனை வைத்து லோகேஷ் இப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அல்லு அர்ஜூன் தற்போது அட்லீ இயக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்
கூலி படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூ 50 கோடி சம்பளமாக வாங்கினார். நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனால் தற்போது அடுத்தபடத்திற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூன் படத்திற்கு அவர் ரூ 75 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
Lokesh Kanagaraj’s brand value is straight-up bulletproof 🔥
— IndiaOnScreen (@IndiaOnScreen) January 13, 2026
After Vikram made the “universe” wave mainstream and turned him into a pan-India name, the buzz around his next move is only getting louder. Even with the chatter around Leo/Coolie being “mixed” for some, the market… pic.twitter.com/syvWFuVt6U





















