மேலும் அறிய

Suriya: ஹீரோயின் விஷயத்தில் சூர்யா ரொம்ப ஒழுக்கம்.. நான் அப்படியில்ல.. சிவகுமார் ஓபன் டாக்!

என்னுடைய மகன் சூர்யா பார்க்க சாதாரணமாகத்தான் இருப்பார். ஆனால் நினைப்பதை சாதிக்காமல் விட மாட்டார் என நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

படங்களில் காதல் காட்சி என்றால் கூட சூர்யா ஹீரோயினை தொடாமல் தான் நடித்திருப்பார் என அவரது அப்பாவும், பழம்பெரும் நடிகருமான சிவகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராக வலம் வருபவர் சிவகுமார். திரையுலக மார்க்கண்டேயன் என அனைவராலும் அழைக்கப்படுபவர். சிவகுமார் குடும்பத்தில் இருந்து அவரது மகன்களான சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா ஆகியோரும் இன்றளவும் முன்னணி பிரபலங்களாக திகழ்கின்றனர். 85 வயதிலும் மிகவும் ஆக்டிவாக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் சிவகுமார், பல்வேறு திரையுலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திரையுலக அனுபவங்களையும், சினிமா பிரபலங்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

No photo description available.

இப்படியான நிலையில் இவர் ஒரு நேர்காணலில் அவர் நடிகை ராதிகாவுடன் பங்கேற்றார். அப்போது சிவகுமாரிடம், சூர்யா சினிமா வாழ்க்கை பற்றி பேசப்பட்டது. அதில் பேசிய அவர், “நான் ஒன்று சொல்கிறேன். தப்பா நினைக்க வேண்டாம். சூர்யா 25,30 படம் நடிச்சிருக்கார். கதாநாயகி மேலே படுத்து உருளும் காட்சியில் ஒருபோதும் நடித்திருக்கவே மாட்டார். அந்த அயோக்கியத்தனத்தை நான் தான் செய்துள்ளேன். எத்தனை கதாநாயகியுடன் அப்படி நடித்திருப்பேன் என்பது தெரியாது. ஆனால் சூர்யா காதல் காட்சி என்றால் கூட ஹீரோயினை தொடாமல் தான் நடித்திருப்பார். நான் அப்படித்தான் இருக்க வேண்டும் என சொன்னதில்லை. 

சூர்யா முதல் படமான நேருக்கு நேர் படத்தில் டான்ஸ் ஆடியதைப் பார்த்து மறந்தும் கூட அவர் இனிமேல் டான்ஸ் ஆடக்கூடாது. அவ்வளவு கேவலமாக இருக்கிறது என பத்திரிக்கை ஒன்றில் விமர்சனம் எழுதியிருந்தார்கள். ஆனால் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற ஓ செனோரியரிட்டா பாட்டைப் பார்த்து விட்டு அன்று சொன்னதை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார்கள். 

சூர்யா ஜீன்ஸ் பேண்ட்  போட்டுக்கொண்டு அது நனையும் அளவுக்கு வியர்வை வழிய வழிய 10 மணி நேரம் டான்ஸ் ஆடுவார். அதேபோல் எனக்கு தொப்பை போட்டுள்ளது. ஆனால் சூர்யா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். அவர் ஒரு வெறி பிடித்த ஆள் போல இருப்பார். பார்க்க சாதாரணமாகத்தான் இருப்பார். நினைப்பதை சாதிக்காமல் விட மாட்டார்” என சிவகுமார் கூறியிருக்கிறார். 

தொடர்ந்து, சூர்யா - ஜோதிகா காதல் பற்றி பேசிய சிவகுமார், நான் ஏராளமான ஹீரோயின்களுடன் காதல், திருமணம் போன்ற காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என சொல்லும்போது குறுக்கே நிற்க விரும்பவில்லை. பிரச்னை ஜோதிகா வீட்டு பக்கத்தில் இருந்து வந்தாலும், அது பேசி செட்டாகி விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget