மேலும் அறிய

Legend Saravanan: தீபாவளிக்கு படம் ரிலீஸ்.. மாஸான டைட்டில்.. லெஜண்ட் சரவணன் தந்த அப்டேட்

லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்தும் ரிலீஸ் தேதியையும் அவரே தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தனது கடையின் விளம்பரத்தில் நடிக்க தொடங்கினார். இந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா மோத்வானி ஆகியோருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருந்தார். இதுதொடர்பான விளம்பர வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன. பலரும் விமர்சித்த போதும் அதையெல்லாம் லெஜண்ட் சரவணன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சினிமாவிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். 

நானும்  இப்ப ஹீரோ தான்

தனது கடை விளம்பரத்திற்காகவே பல ஆடைகளை அணிந்து ஆட்டம் போட்ட லெஜண்ட் சரவனன், பில்லா 2 படத்தின்  இயக்குனர்களான ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில்  தி லெஜண்ட் படத்தில் நடிக்க தொடங்கினார். இப்படம் தமிழை தாண்டி பல மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் தெலுங்கில் பாலையாவுடன் நடனம் ஆடிய ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், லெஜண்ட் சரவணனுக்கு மகிழ்ச்சிதான். தமிழக மக்கள் தன்னையும் ஹீரோவாக ஏற்றுக்கொண்டதாக அவரே தெரிவித்தார். 

உண்மை சம்பவம்

இப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பது உறுதியானது. இப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் இவருடன் நடிகை ஆண்ட்ரியா, சாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பாயல் ராஜ்புத் ஹீரோயினாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர், தெலுங்கில் வெளியான RX 100 படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தீபாவளிக்கு ரிலீஸ்

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்த அப்டேட் ஒன்றை லெஜண்ட் சரவணன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளி வெளியீட்டை நோக்கி இறுதி கட்ட படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார். மேலும், தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நல்லபடியாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என தெரிவித்தார். 

மாஸான டைட்டிலோடு வருவோம்

மேலும், இன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு மாஸ், ஆக்சன், த்ரில்லர் ஜானரில் படம் வெளியாகும். படத்தின் டைட்டிலும் மாஸாக இருக்கும். இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக அனைவரது தீபாவளியாக இருக்கும் என்றும் படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget