Legend Movie : தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் ரவுண்டு கட்டிப்பேசிய அண்ணாச்சி...! லெஜண்ட் ப்ரோமோஷனில் அசத்தல்..!
லெஜண்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திரா சென்ற படத்தின் நாயகன் ஜெலண்ட் சரவணன் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் கலந்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜண்ட் சரவணா. அவரது கடைகளின் விளம்பரங்களுக்கு பிரபல நடிகைகளுடன் இணைந்து நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். ஹன்சிகா, தமன்னா என்று தமிழின் பல முன்னணி நாயகிகளுடன் இணைந்து அவரது கடையின் விளம்பரங்களில் ஜோடியாக நடித்தார்.
அவரது உடல் மொழி, ஆடை, மேக்கப் மூலமாக கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட லெஜண்ட் சரவணா தற்போது லெஜண்ட் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படம் வரும் 28-ந் தேதி வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என்று இந்தியாவின் முக்கிய திரையுலகங்களில் பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், படத்தின் தெலுங்கு வெளியிட்டிற்காக ஆந்திரா சென்றிருந்த நாயகனும், தயாரிப்பாளருமாகிய லெஜண்ட் சரவணா தெலுங்கு மக்கள் முன்பு தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் கலந்து பேசி அசத்தினார்.
resume: know five languages fluently.
— N A T Z (@thewreckedone_) July 23, 2022
that known language. pic.twitter.com/sMT6IazQa8
அவர் பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த படத்தில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் லட்சுமிராய் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மறைந்த நடிகர் விவேக் மற்றும் பிரபு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க : She Hulk : ஹல்க்கை காப்பாற்ற வந்த பெண் ஹல்க்...! மார்வெல் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்..!!!
மேலும் படிக்க : Black Panther Wakanda : சாட்விக் போஸ்மேன் இல்லாமல் வெளியான பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் நெகிழ்ச்சி டீசர்.. ரசிகர்கள் கண்ணீர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்