Legend Movie: “இவர் நடித்தால் யார் வந்து பார்ப்பார் என்று நினைத்தேன்”-லெஜண்ட் குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் ஓபன் டாக் !
லெஜண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசியுள்ளார்.
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விவேக், ஊர்வசி ரௌடேலா, கீர்த்திகா, நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசை மற்றும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவானது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசினார். அப்போது, “முதலில் இந்த கதையை கேட்டு பண்ண மாட்டேன் என்று சொல்லி விட்டேன். பின்னர் இயக்குநர்கள் 6 மாதங்களில் திரைக்கதையை மாற்றி விட்டு வந்தார்கள். அதன்பின்னர் நான் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டேன். லெஜண் ட் சரவணன் எனக்கு 12 வருட கால நண்பர். அவர் நடிக்கிறேன் என்று சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் நடித்தால் யார் வந்து பார்ப்பார் என்று நினைத்தேன். இந்த படத்தின் பெரிய பலம் படக்குழு தான். ஒவ்வொரு பாடல்களிலும் சரவணன் கடுமையாக உழைத்து இருக்கிறார். இந்தப் படத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஆச்சரியம் வரும்” எனத் தெரிவித்தார்.
The Man! #TheLegend himself on the stage!!#TheLegendAudioLaunch #TheLegendMovie #TheLegendNewSaravanaStoresProduction pic.twitter.com/yrT537p7bw
— The Legend (@_TheLegendMovie) May 29, 2022
முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு முன்பாக, படத்தின் நாயகன் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தி லெஜண்ட் திரைப்படம் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் , மாஸ், ரொமான்ஸ் ஆகியவை கலந்த படமாக இருக்கும். இப்படம் இந்திய சினிமாவுக்கே ஒரு எடுத்துக்காட்டாக அமையும். மிகப்பெரிய வெற்றி படமாகவும் இருக்கும் எனவும் பேன் இந்தியா படமாக இருக்கும்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்