மேலும் அறிய

KH234 Update: விரைவில் கமல் - மணிரத்னம் இணையும் படத்தின் ஷூட்டிங்.. சுஹாசினி தந்த சூப்பர் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்க இருக்கும் KH234 படம் குறித்தான அப்டேட் கொடுத்துள்ளார் நடிகை சுஹாசினி.

தென்னிந்தியாவை மையப்படுத்தி 'தெற்கின் எழுச்சி' என்கிற தலைப்பின் கீழ்  “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு நேற்று  சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நடிகர் ராணா டகுபதி, நடிகை ரேவதி, நடிகை குஷ்பு உள்பட பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுஹாசினி தனது சினிமா அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.  நிகழ்ச்சி முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுஹாசினி, தனது கணவர் மற்றும் மணிரத்னம் இயக்க இருக்கும் KH234 படம் குறித்தான ஒரு சின்ன அப்டேட்டை பகிர்ந்துகொண்டார்.

மனிரத்னம் ஃபேமிலியில் இருக்கப் போகிறேன் என்று எதிர்பார்க்கவில்லை!

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுஹாசினியின் கணவர் மணிரத்னம் மற்றும் அவரது சித்தப்பா கமல்ஹாசனும் இணைய இருப்பது குறித்து தன்னுடைய கருத்தைக் கேட்டபோது சுஹாசினி அளித்த பதில்:

“கமலுடைய எத்தனையோ படங்களை நான் பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக எனக்கு அவர் நடித்த நாயகன் படம்தான் அதிகம் பிடித்த படம். நாயகன் படம் பார்த்தபோது நான் மணிரத்னம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கப் போகிறேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் இந்த முறை கமல் மற்றும் மணி மீண்டும் இணைவதை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்”

விரைவில் ஷூட்டிங்

சுஹாசினியிடம் படம் பற்றி ஏதாவது அப்டேட்களை மணிரத்னம் பழகிக் கொள்வாரா என்று சுஹாசினியிடம் கேட்டபோது “ படம் பற்றி ஏதாவது சொன்னால் நான் அதை வெளியில் சொல்லிவிடுவேன் என்பதனால் மணிரத்னம் என்னிடம் படம் பற்றி பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் படம் தொடர்பான ஒரு சின்ன படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது” என்று சுஹாசினி தெரிவித்தார்.

என்னுடைய படங்களுக்கு ஆலோசனை கொடுப்பார்

 நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் வலம் வருபவர் சுஹாசினி அதுவும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குநரின் இணையாக இருக்கும் சுஹாசினி தன்னுடைய படங்கள் குறித்து தனது கணவரிடம் ஆலோசனை கேட்பாரா என்கிற கேள்விக்கு அளித்த பதில்:

“ நான் எழுதும் திரைக்கதைகளை அவரிடம் படிக்க கொடுப்பேன். அதை படித்தபின் அதில் அவருக்கு ஏதாவது மாற்றுக் கருத்து  இருந்தால் மணிரத்னம் ஆலோசனை கூறுவார். ஆனால் படமாக எடுக்கப்பட்டபின் அதில் அவர் தலையிட மாட்டார்” 

KH234

உலக நாயகன் கமல்ஹாசனின் 234ஆவது படத்தை இயக்க இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது கிட்டதட்ட 35  ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைய இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் நடிகர் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் படிக்க : Suhasini: “திரைப்படத்தில் பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் இதைதான் செய்கிறார்கள்” - மனம் திறந்த சுஹாசினி

Cricket in Olympics: ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் டி20 கிரிக்கெட்; ஒப்புதல் அளித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget