மேலும் அறிய

KH233 Update: கமலும், ஹெச். வினோத்தும்.. தீப்பந்தம் தெறிக்க தெறிக்க அதிரடி அப்டேட்.. எல்லா டீட்டெய்ல்ஸும் இங்க இருக்கு

இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

கமல் - ஹெச்.வினோத் காம்போ

இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,  KH233 படத்துக்காக கமல் - ஹெச்.வினோத் இணைவதாக வீடியோ பகிரப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 52ஆவது படமாக இப்படம் உருவாகிறது.

வரிசைகட்டி நடிக்கும் கமல்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான கமல்ஹாசன் கோலிவுட்டில் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். சென்ற ஆண்டு வெளியான இப்படம் கோலிவுட்டில் வரலாற்று வசூல் சாதனை புரிந்து மாஸ் ஹிட் அடித்தது.

இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் பா.ரஞ்சித், மணிரத்னம் ஆகியோருடன் கமல்ஹாசன் கைக்கோர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே பல காலமாக தடைபட்டிருந்த இந்தியன் 2 படப்பணிகளும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

மற்றொருபுறம் பிரபாஸ் - அமிதாப் என பான் இந்தியா படமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

233ஆவது படம்

இதனிடையே மணிரத்னத்துடன் கமல் இணைந்துள்ள திரைப்படம் அவரது 234ஆவது படம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 233ஆவது திரைப்படம் குறித்த கேள்விகள் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்து வந்தன.

இந்நிலையில் கமலும் ஹெச்.வினோத்தும் இணைவதாக  கடந்த சில நாள்களாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை அடுத்து கமலுடன் ஹெச்.வினோத் இணைவதாகவும், பான் இந்தியா படமாக இப்படம் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாகின.

தன் முதல் படமான சதுரங்க வேட்டை தொடங்கி ஹெச்.வினோத் தொடர்ந்து சமூக பொறுப்புணர்வு கொண்ட கதைகளை இயக்கி வரும் நிலையில், இந்தப் படமும் அவ்வாறே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.

மேலும் முன்னதாக நெல் ஜெயராமன் மற்றும், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களுடன் கமல் - ஹெச்.வினோத் இருவரும் கலந்துரையாடிய நிலையில், அவரைப் பற்றிய கதையாக இருக்கலாம்  எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ‘ரைஸ் டூ ரூல்’ எனும் வாசகத்துடன் அதகளமாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget