மேலும் அறிய

கோலிவுட் செய்யாத சாதனை! ரூ1000 கோடி வசூலித்து கெத்துகாட்டிய ‘கேஜிஎப் 2’! தொடரும் வேட்டை.!

தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  ‘கேஜிஎப் 2’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இதன்மூலம் ஆயிரம் கோடி வசூலித்த 4ஆவது இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை  பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டான  ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது. 

இந்தப்படம் வெளியானது முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது. இந்த நிலையில், ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவலை சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

 

கன்னட ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கேஜிஎஃப் படத்துக்கு முன்பு சில தமிழ் ட்ரோலர்கள் கன்னட படங்களை ட்ரோல் செய்தனர். இன்று ஒரு கன்னட படமான கேஜிஎஃப் வசூலில் உலகம் முழுவதும் 1000 கோடிகளை கடந்துள்ளது. ஒரு தமிழ் படம் கூட 1000 கோடியை தாண்டவில்லை. ஆனால் இன்று ஏராளமான தமிழ் உள்ளிட்ட பிற மொழி மக்களை கேஜிஎஃப் படத்தை ஆதரிக்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தப்படம் தமிழில் அதிகம் வசூல் செய்த  ‘2.ஓ’ படத்தின் வசூலை பீட் செய்தது. தமிழில் இதுவரை எந்தப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை. தெலுங்கில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர். கேஜிஎஃப் 2 படங்கள் ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. தென்னிந்திய சினிமாவிற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூலிக்காததை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget