மேலும் அறிய
Advertisement
அழகான மானா இல்ல, சீறி பாயும் பெண் சிங்கமா? 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்து மிரள வைக்கும் கீர்த்தி சுரேஷ்...!
அண்ணாத்த படத்தில் ரஜினியின் பாசமான இன்னசெண்ட் தங்கையாக நடித்த இவர், செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த சாணிக் காயிதம் படத்தில் எதிரிகளை பழித்தீர்க்கும் பெண் சிங்கமாக மாறி நடிப்பில் அசத்தி இருப்பார்.
திரையுலகில் அழகு தேவதையாக வலம் வரும் கீர்த்தி, தமிழ் திரையுலகில் 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
- குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக மலையாளத்தில் 2000ம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
- மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2015ம் அண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
- 2016ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் அழகான டாக்டராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.
- சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த கீர்த்திசுரேஷ் ரஜினி முருகன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்பத்தி இருப்பார்.
- 2017ம் ஆண்டு பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த சாட்டை படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய இவர் விஜய்யின் பைரவா படத்தில் விஜய்க்கு சரிசமமாக நடித்திருந்தார்.
- தொடர்ந்து விஷாலுடன் சண்டைக்கோழி2, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விக்ரமனுடன் சாமி2 படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் சர்கார் படத்தில் இணைந்தார்.
- முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை திரையுலகமே பார்த்து வியந்தது நடிகையர் திலகம் படத்தில் தான். தென்னிந்தியாவின் நடிகையர் திலகம் என அழைக்கப்படும் சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
- நடிப்புக்கே பெயர் போன சாவித்ரி போல், அவரது ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் திரையில் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். நவயுக சாவித்ரியை கண்முன் காட்டிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது.
- சூரியாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், ஓடிடி தளத்தில் வெளியான மிஸ் இந்தியா, பெண் குயின் படங்களிலும் நடித்திருந்தார்.
- அடுத்ததாக 2021ம் ஆண்டு மோகன் லால் நடித்த வரலாற்று படமான மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் படத்தில் வரலாற்று நாயகியாக நடித்து அசத்தினார்.
- அண்ணாத்த படத்தில் ரஜினியின் பாசமான இன்னசெண்ட் தங்கையாக நடித்த இவர், செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த சாணிக் காயிதம் படத்தில் எதிரிகளை பழித்தீர்க்கும் பெண் சிங்கமாக மாறி நடிப்பில் அசத்தி இருப்பார்.
- தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்தில் பெண்ணியவாதியாக நடித்துள்ளார்.
- தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கண்ணிவெடி, சைரன், ரிவால்வர் ரீட்டா படங்கள் வெளியாக உள்ளன.
- காதல், காமெடி, கிராமத்திய பெண், பாசமிகு தங்கை, வீரம், பெண்ணியம் என பல விதங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion