Keerthi suresh: மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் கீர்த்தி சுரேஷ்..! லைக்ஸ்களை தெறிக்க விடும் ரசிகர்கள்...!
கீர்த்தி சுரேஷ் 'சர்க்கார் வாரி பட்டா' திரைப்படத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு மாடர்ன் உடையில் போட்டோஸ் போஸ்ட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகையாக தேசிய விருது பெற்ற மிக சிறந்த நடிகையாக விளங்குகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாள திரைப்படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்களால் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டார்.
மாறுபட்ட கதாபாத்திரங்கள்:
மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவுடன் இணைந்து 'சாணி காயிதம்' திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை குவித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்.
செட் ஆகல கீர்த்தி :
சமீபத்தில் நடிகர் நானி ஜோடியாக வெளியான 'தசரா' திரைப்படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது. கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை என கருத்து தெரிவித்து இருந்தனர் அவரின் ரசிகர்கள்.
காலாவதி ஹிட் :
அது தவிர தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் லக், சர்க்கார் வாரி பட்டா உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல வசூலை பெற்றன. காலாவதி என்ற கதாபாத்திரத்தில் மெனக்கெடல் இல்லாமல் போகிற போக்கில் நடித்தது போல எளிதாக நடித்துவிட்டார். வங்கிக் கடன் மோசடியை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் இடம்பெற்ற 'காலாவதி' பாடல் வெறித்தனமான ஹிட் பாடலாக அமைந்தது. சுமார் 180 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாகி முதலாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.
மாடர்ன் உடையில் அசத்தும் கீர்த்தி :
உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தனது ஒல்லியான பெல்லியை காட்டி போட்டோஸ் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் மிகவும் கிளாமரான ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்து இளசுகளின் நெஞ்சங்களை பதறவைத்துள்ளார். இந்த போட்டோ போஸ்ட் செய்து சில மணி நேரங்களிலேயே 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

