Kareena kapoor: தோள் மேல் கை போட முற்பட்ட ரசிகர்...மிரண்டு போன கரீனா கபூர் !
ரசிகர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக கரீனா கபூரின் தோள் மேல் கை போட முற்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரது பாடிகார்ட் அந்த நபரைத் தடுத்து கரீனாவை அங்கிருந்து நகர்ந்து செல்ல உதவியுள்ளார்.
கடந்த ஞாயிறு இரவு அன்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது மகன் மற்றும் அம்மாவுடன் மும்பை ஏர்போர்ட் சென்று இருந்தார். அப்போது அவரைப் பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரைச் சுற்றி வளைத்துள்ளனர்.
நடிகை கரீனா கபூர் தனது அம்மா மற்றும் மகன் ஜஹாங்கீர் அலி கான் உடன் மும்பை ஏர்போர்ட் வந்திருந்தபோது, ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக கரீனாவை சுற்றிக் குவிந்துள்ளனர். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக கரீனா கபூரின் தோள் மேல் கை போட முற்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரது பாடிகார்ட் அந்த நபரைத் தடுத்து கரீனாவை அங்கிருந்து நகர்ந்து செல்ல உதவியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
View this post on Instagram
அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் கரீனா கபூரின் தோள் மீது கை போட முற்படும்போது, பாடிகாட் தடுத்திருக்கிறார். மேலும் கரீனா கபூர் முகம் சுளித்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார். பின்னர் ரசிகர்கள் சிலரும் அவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டனர். பாடிகார்ட் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக சென்றார் கரீனா.
View this post on Instagram
கரீனாவைத் தொடர்ந்து அவரது தாய் கரீனாவின் ஒரு வயது மகன் ஜஹாங்கீரைத் தூக்கிக்கொண்டு பின்னால் நடந்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.