Kantara Movie: திடீர் தியேட்டர் விசிட்.. ஆர்ப்பரித்த தமிழ் ரசிகர்கள்.. அதிர்ந்து போய் நின்ற ‘காந்தாரா’ பட நடிகர்..!
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள காந்தாரா படத்திற்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘காந்தாரா’
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில், காந்தாரா குறித்த தகவலால் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு நேற்று வெளியானது. கன்னட ரசிகர்களை போலவே, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நேற்று காந்தாரா படம் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் அவருக்கு ஆரவாரமாக உற்சாக வரவேற்பினை அளித்தனர். அதன் பிறகு அவர், ரசிகர்களிடன் படம் குறித்து உரையாடினார்.
Massive response for #Kantara movie in Tami Nadu pic.twitter.com/LwvZRWBQhU
— Yuvashree M (@thani_oruval) October 16, 2022
பிரபலங்கள் பாராட்டு:
காந்தாராவை பார்த்த பலரும் பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக இப்படத்தை நடிகர்கள் தனுஷ், கார்த்தி, ப்ரித்வி ராஜ், பிரபாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி தள்ளினர். இதனால் படக்குழு செம குஷியில் உள்ளனர்.
படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி:
கன்னட திரையுலகில் ரசிகர்களின் மனதைக் கவரும் இய்குனர்களுள் ரிஷப் ஷெட்டியும் ஒருவர். இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள பெல் பாட்டம், லூசியா, ரிக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் இயக்குனர்களுடன் பணிபுரிய ஆசை...
காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிகவும் பிசியாக வலம் வருகின்றனர். படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, தான் மிகப்பெரிய மணிரத்னம் ஃபேன் என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் வெளியானது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது என்றும் அவர், குறிப்பிட்டார். ரிஷப் ஷெட்டியிடம் தமிழில் உள்ள எந்தெந்த இயக்குனர்களுடன் பணிபுரிய ஆசையாக உள்ளது என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களுடன் தமிழ் படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.