Kangana Ranaut Warning : வீட்டுக்கு வந்து இப்படிப் பண்ணாரு.. எங்க போனாலும் ஃபாலோ பண்றாங்க.. கங்கனா ரனாவத் பகீர் குற்றச்சாட்டு
கங்கனா ரனாவத், பிரபல பாலிவுட் தம்பதியான அலியாவும், ரன்பீரும் தன்னை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டியதோடு கடுமையாக இன்ஸ்டா ஸ்டோரி மூலம் மறைமுகமாக எச்சரித்துள்ளார்
![Kangana Ranaut Warning : வீட்டுக்கு வந்து இப்படிப் பண்ணாரு.. எங்க போனாலும் ஃபாலோ பண்றாங்க.. கங்கனா ரனாவத் பகீர் குற்றச்சாட்டு Kangana Ranaut warns bollywood couple ranbir kapoor and alia bhatt spying on her everywhere Kangana Ranaut Warning : வீட்டுக்கு வந்து இப்படிப் பண்ணாரு.. எங்க போனாலும் ஃபாலோ பண்றாங்க.. கங்கனா ரனாவத் பகீர் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/130be1ea14ff8b6641f35b281cd57dd51675703663270224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் சர்ச்சைகளை கிளப்புவதில் பிரபலமானவர். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபலமானவர்கள் பலரின் மீதும் பல குற்றங்களை முன்வைப்பதிலும் பிரபலமானவர். அந்த வகையில் தற்போது அவரின் குற்றச்சாட்டு பாலிவுட் பிரபல தம்பதியான அலியா பட், ரன்பீர் கபூர் மீது மறைமுகமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
கங்கானாவின் லேட்டஸ்ட் குற்றச்சாட்டு :
கங்கனா ரனாவத் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின் படி தன்னை ஒரு பிரபல தம்பதி உளவு பார்க்கிறார்கள் என்பதுதான். பார்க்கிங் ஏரியா, பொது இடம், தெரு, பால்கனி என எங்கு சென்றாலும் அவரை உளவு பார்ப்பதாகவும் ஜூம் லென்ஸ் பயன்படுத்தி எந்நேரமும் அவர் செய்யும் விஷயங்களை நோட்டமிடுவதாகவும் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Kangana Ranaut through her Facebook handel exposing those Bollywood mafia. #KanganaRanaut pic.twitter.com/qBnssFc67H
— Kangana Ranaut (@TeamKanganaaa) February 5, 2023
ரன்பீர் கபூர் - ஆலியா பட் மீது சந்தேகம் :
கங்கனா யாரை பற்றி இப்படி குற்றம் சாட்டுகிறார் என்பதை வெளிப்படையாக கோரவில்லை என்றாலும் நெட்டிசன்கள் யுகங்களின் படி அது ரன்பீர் கபூர் - ஆலியா பட்டாக இருக்குமோ என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இது குறித்து அவர் இரு தினங்களுக்கு முன்னர் தந்தி இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிக்கையை பதிவிட்டு இருந்தார்.
ஊக்குவிக்கும் மனைவி:
கணவர் செய்யும் குற்றங்களை பற்றி மனைவி தெரிந்து இருந்தாலும் அவரை சரி செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளாமல் கணவரை இது போன்ற கீழ்த்தரமான செயல் செய்ய ஊக்குவித்து வருமாறு குற்றம் சாட்டியுள்ளார். பிரபலமான நட்சத்திரங்களை குறி வைத்து தாக்கினால் மட்டுமே அவர்களால் பிரபலமாக முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை தான் அவர்களும் செய்கிறார்கள்.
இன்ஸ்டா ஸ்டோரி மூலம் எச்சரிக்கை :
மேலும் அவர் கூறுகையில் தனது பர்சனல் தகவல்கள் கூட திருடப்படுவதாக கங்கனா உணர்வதாக தெரிவித்துள்ளார். "நேற்று இரவு முதல் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கேமராவோடு அல்லது கேமரா இல்லாமல் யாரும் பின்தொடரவில்லை. வார்த்தைகள் மூலம் புரியவைக்க முடியவில்லை என்றால் வேறு வழியில் தான் புரிய வைக்க வேண்டும். உங்களை திருத்தி கொள்ள எச்சரிக்கிறேன். இல்லையேல் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்க கூட தயங்க மாட்டேன். என்னை பைத்தியம் என அழைத்தாலும் கூட கவலையில்லை. நான் எந்த அளவிற்கு செல்வேன் என்பது எனக்கே தெரியாது' என மிகவும் கடுமையாக இன்ஸ்டா ஸ்டோரி மூலம் எச்சரித்து ஒரு வாள் இமோஜியையும் பயன்படுத்தி இருந்தார் நடிகை கங்கனா ரனாவத். இந்த தகவல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)