Naresh - Madhavi Engagement: டும்.. டும்.. கனா காணும் காலங்கள் ஜோடிக்கு விரைவில் திருமணம்..! குவியும் வாழ்த்துகள்..!
கனா காணும் காலங்கள் தீபிகா - ராஜ் ஜோடியை தொடர்ந்து நரேஷ் - மாதவியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
![Naresh - Madhavi Engagement: டும்.. டும்.. கனா காணும் காலங்கள் ஜோடிக்கு விரைவில் திருமணம்..! குவியும் வாழ்த்துகள்..! Kana Kaanum Kalangal Naresh and Madhavi engagement clicks goes viral online Naresh - Madhavi Engagement: டும்.. டும்.. கனா காணும் காலங்கள் ஜோடிக்கு விரைவில் திருமணம்..! குவியும் வாழ்த்துகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/09/b2c589399c70f508315df07d7cbb0a611686311494115224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியின் எவர்கிரீன் சீரியல்களில் ஒன்று காண காணும் காலங்கள். 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் பள்ளி பருவ காலங்களை கண்முன்னே கொண்டுவந்தது. ஏராளமான டீன் ஏஜ் பசங்களின் ஃபேவரட் சீரியலாக 'காண காணும் காலங்கள்' இருந்து வந்தது.
பள்ளி மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட அந்த தொடருக்கு நல்ல ரீச் கிடைத்ததை தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து அடுத்த தொடர் ஒளிபரப்பானது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த தொடரின் நடிகர்கள் பலரும் இன்று பிரபலமான பர்சனலிட்டிகளாக வலம் வருகிறார்கள். பலரும் வெள்ளித்திரையில் பிரபலமான நட்சத்திரங்களாக இருந்து வருகிறார்கள்.
கனா காணும் காலங்கள் 2:
அந்த வகையில் தற்போது காண காணும் காலங்கள் சீரியலின் சீசன் 2 விஜய் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல டிக் டாக் பிரபலங்கள் இந்த தொடரில் நடித்து வருகிறார்கள். அப்படி டிக் டாக் பிரபலங்களாக இருந்தவர்களான தீபிகா மற்றும் ராஜ் வெற்றி பிரபு இருவருக்கும் இந்த தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடரில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்களுக்குள் காதல் மலர இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன.
தீபிகா - ராஜ் ஜோடியை தொடர்ந்து காண காணும் காலங்கள் சீரியலின் மற்றுமொரு காதல் ஜோடி தான் நரேஷ் மற்றும் மாதவி. இந்த தொடரில் மதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நரேஷ். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்து ஏராளமான ரீல்ஸ் வீடியோகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். தீபிகா - ராஜ் திருமணத்தை தொடர்ந்து இவர்களின் திருமணம் எப்போது என பலரும் கேள்வி எழுப்பி வந்ததால் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நரேஷ் - மாதவி தங்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
நரேஷ் - மாதவி நிச்சயதார்த்தத்திற்கு கனா காணும் காலங்கள் டீம் மொத்தமும் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளது. பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். திருமணம் எப்போது என்பது தான் தற்போது அவர்களின் ரசிகர்களின் அடுத்த கேள்வியாக இருந்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)