மேலும் அறிய

”ரஜினி சினிமாவை விட்டு போனா நானும் போக வேண்டியதுதான் “ - இருவருக்குமான நட்பை பகிர்ந்த கமல்!

“ நானும் ரஜினியும் எப்படி பேசிக்கொள்வோம் என அறிந்தால் ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்ளவே மாட்டார்கள்"

திரையுலகில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இரு நடிகர்களுக்கு இடையே மிகுந்த போட்டி இருக்கும் . எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி -கமல் , விஜய் - அஜித் என முன்னணி நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் உண்மையில் இந்த போட்டி நடிகர்கள் எல்லாமே சினிமாவை தாண்டி , நெருங்கிய நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள் . மோதல் என்பது ரசிகர்களுக்கு மத்தியில்தான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினி- கமல் நட்பு குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்.. 


”ரஜினி சினிமாவை விட்டு போனா நானும் போக வேண்டியதுதான் “ - இருவருக்குமான நட்பை பகிர்ந்த கமல்!

கமல் - ரஜினி :

ரஜினி - கமல் இருவருடைய நட்பு, 1975-ல் வெளிவந்த 'அபூர்வராகங்கள்' படத்தில் தொடங்கியது. ’நினைத்தாலே இனிக்கும்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' , ‘16 வயதினிலே’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதே போல ரஜினி படத்தில் கமலும் , கமல் படத்தில் ரஜினியும் ஒருவருக்கொருவர் கெஸ்ட் ரோலில் நடிக்கவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். எந்தவொரு ஈகோவும் இல்லாதது என்கின்றனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் .



”ரஜினி சினிமாவை விட்டு போனா நானும் போக வேண்டியதுதான் “ - இருவருக்குமான நட்பை பகிர்ந்த கமல்!

தங்களின் நட்பு பற்றி கமல் :

கமல்ஹாசன் மேடை ஒன்றில் ரஜினியை பற்றி பகிர்ந்திருந்தார். அதில் “ நானும் ரஜினியும் எப்படி பேசிக்கொள்வோம் என அறிந்தால் ரசிகர்கள் இப்படி மோதிக்கொள்ளவே மாட்டார்கள் . ஆனால் இரண்டு பக்கமும் ஒரு கோல் போஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம்.  நானும் ரஜினியும் விழா ஒன்றில் பங்கேற்ற பொழுது ரஜினி தளபதி படத்தின் டைட்டிலை காதில் சொன்னார். அப்போது எனக்கு கணபதி என விழுந்துவிட்டது. நான் உடனே வேண்டாங்க...இது என்னவோ விநாயகர் சதுர்த்தி போல இருக்கு என்றேன் . அதன் பிறகு அவர் நல்லாத்தானே இருக்கு தளபதி என்றார். ஓ! தளபதியா  அருமையாக இருக்கு என்றேன் . அந்த அளவுக்கு நாங்கள் பேசுவோம். அதே போல ரஜினி சினிமாவை விட்டு விலகுவதாக என்னிடம் சொன்னார். உடனே நான் நீங்க போயிட்டீங்கன்னா நானும் போக வேண்டியதுதான். என்னையும் துரத்தி விட்டுருவாங்கய்யா.. போகாதீங்கன்னு சொன்னேன்.. இன்று அவர் நடித்த பல படங்களில் எனது பங்கும் உண்டு ..ஏனென்றால் அவர் சினிமாவை விட்டு போகக்கூடாது என தடுத்தவர்களில் நானும் ஒருவன் “ என்றார்.


”ரஜினி சினிமாவை விட்டு போனா நானும் போக வேண்டியதுதான் “ - இருவருக்குமான நட்பை பகிர்ந்த கமல்!

 

ரஜினி , கமல் இருவருக்குமே குருநாதர் பாலச்சந்தர்தான்.  ரஜினி  எப்போதுமே ஒரு படத்தின் கதையில் முடிவெடுக்க சிரமமாக இருந்தாலோ அல்லது ஆலோசனை தேவைப்பட்டாலோ உடனடியாக அவர் தொடர்புக்கொள்ளும் ஆள் கமலாகத்தான் இருப்பார் . அந்த அளவுக்கு இருவரும் திரையை தாண்டிய நெருங்கிய நண்பர்கள்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget