Vikram 70 days: நூறாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் கமலின் விக்ரம்!
Vikram 70 days: லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த விக்ரம் படம் இன்று 70-வது நாளைத் தாண்டி உள்ளது.
Vikram 70 days: லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த விக்ரம் படம் இன்று 70-வது நாளைத் தாண்டி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயகத்தில், கமல்ஹாசன் தயரித்து நடித்த படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரைகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி, யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து ஆக்ஷன் காட்சிகளில் தோன்றியது பெரும் வரவேற்பை பெற்றது.
கிளைமேக்ஸில் 5 நிமிடங்கள் மட்டுமே வரும் நடிகர் சூர்யா, ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு இவரை விட யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அல்டிமேட்டாக நடித்து அப்லாஸ் வாங்கினார். இதுபோல பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், விக்ரம் படம் வெற்றிகரமாக 70-வது நாளை தாண்டி பல திரையருங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. சென்னையில் பி.வி.ஆர், எஸ்கேப், பலாசோ; கோவையில் ஐநாக்ஸ், கேஜி; திருச்சி ல சினிமாஸ், தர்மபுரி டிஎன்சி என பல திரையருங்களில் வெற்றிகரமாக திரையிடப்படுகிறது.
விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து கைதி, விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
#Vikram Blockbuster 70 Days.. pic.twitter.com/SlPg8wJ11p
— Ramesh Bala (@rameshlaus) August 11, 2022
தற்போது விஜயின் 67- வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.