Panerai Watch: 50 ஆண்டு வாரண்ட்டியாம்.. ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்.. அப்படி என்ன இதுல ஸ்பெஷல்?
இந்தியன் 2 பட வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் இயக்குநர் ஷங்கரை அழைத்து ஸ்பெஷல் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
ஷங்கரை புகழ்ந்து தள்ளிய கமல்
இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை பார்த்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கரை பாராட்டி ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி, ”இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக்கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி” என்றார் கமல்ஹாசன். மேலும், இயக்குநர் ஷங்கருக்கு வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். கமல் பரிசளித்த இந்த வாட்சின் சிறப்பம்சம் என்ன என்பதை கீழே காணலாம்.
பனேரை (panerai)
1860ஆம் ஆண்டு இத்தாலியில் முதன்முதலில் பனேரை (panerai) வாட்ச் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த வாட்ச் நிறுவனம் பல நூற்றாண்டுகள் தாண்டியும் இன்று வரை மக்களின் மனதில் நிலைத்து முன்னணி பிராண்டாக இருந்து வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் சர்வதேச பிராண்டாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான வாட்ச்கள் ஸ்விஸ் டெக்னாலஜியை கொண்டு இத்தாலியன் டிசைனில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், Waterproof உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் உள்ளது.
இந்த பனேரை பிராண்ட் ஏழு விதமான வாட்ச்களை இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளது. Panerai Luminor, Panerai Radiomir, Panerai Radiomir, Panerai Luminor Due, Panerai Ferrari, Panerai Luminor Submersible என ஏழு விதமான மாடல்கள் உள்ளன. இந்த வாட்சின் விலை 4,90,200 லட்ச ரூபாயிலிருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை இருப்பதாக தெரிகிறது.
சிறப்பம்சம்
இந்த பனேரை பிராண்ட் வாட்சானது அனைவரையும் சுண்டி இழுக்க கூடியதாம். எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் கவனத்தை ஈர்க்கும் ஸ்டைல் இந்த வாட்சிற்கு இருக்குமாம். இந்த வாட்சிற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த பனேரை வாட்ச் சுமார் 50 ஆண்டுகள் வாரண்டியை கொண்டது. மேலும், இருட்டிலும் ஒளிரும் தன்மையை கொண்டதாக தெரிகிறது.
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B
இப்படி, பல சிறப்பம்சம் கொண்ட இந்த வாட்ச்சை இயக்குநர் ஷங்கருக்கு, நடிகர் கமல்ஹாசன் பரிசாக கொடுத்துள்ளார். Panerai Luminor (PAM 001109) என்ற மாடலை ஷங்கருக்கு பரிசாக அளித்தார் கமல். இந்த வாட்சின் விலையானது இந்திய மதிப்பில் ரூ.8,77,100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாட்ச் இத்தாலியன் டிசையில் செய்யப்பட்டிருப்பதாகவும், waterproof உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது. ஷங்கருக்கு விலையுர்ந்த வாட்ச் பரிசாக கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.