Kamal Haasan- Suriya: கமலுடன் இணையும் சூர்யா.. நேர்காணலில் அசால்ட்டாக அப்டேட் கொடுத்த ஆண்டவர்.. வைரலாகும் வீடியோ..!
ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார்.
ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற ஜீன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.
அறிவித்த கமல்
முன்பிலிருந்தே சூர்யாவை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கமல் முயற்சித்து வந்த நிலையில், அந்த திட்டம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் அந்தத்திட்டத்தின் தொடக்கமாக, ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘விக்ரம்’ படத்தில் ஒரு சிறிய கேமியோ ரோலில், இரண்டு நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடித்துக்கொடுத்துள்ளார் சூர்யா. இந்த நிலையில் நடிகர் சூர்யா தொடர்ந்து ராஜ்கமல் நிறுவனத்தில் படம் நடிக்க உள்ளதாக நடிகர் கமல் கூறியிருக்கிறார். விஜய் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவர் இதனை உறுதி செய்திருக்கிறார்.
The mutual in me is partying 🥳😍🔥
— மாறா 🖤 (@a__tweets2) May 29, 2022
BTW @Suriya_offl to continue working with @RKFI 🔥 pic.twitter.com/YjATDXECXE
முன்னதாக, கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர்.
விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின. அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.