KH 234 : கமலின் 234 ஆவது படம்.. உதயநிதி கேட்ட நறுக் கேள்வி.. கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?
மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை கூறி, தயாரிப்பு குறித்து உதயநிதியை கமல் அணுகியதால், உதயநிதி ஆச்சரியப்பட்டுள்ளார்
![KH 234 : கமலின் 234 ஆவது படம்.. உதயநிதி கேட்ட நறுக் கேள்வி.. கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா? Kamal Haasan 234 film is not a political films confirms udhayanidhi KH 234 : கமலின் 234 ஆவது படம்.. உதயநிதி கேட்ட நறுக் கேள்வி.. கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/be8fdaad71ab477a28cae23cbacdb9c61668603190928102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் கமல் தற்போது டைரக்டர் ஷங்கர் இயக்கும் “இந்தியன் 2”வில் பிசியாக உள்ளார். சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய கமல் அதனையொட்டி அவரது இன்ஸ்டா பக்கத்தில், மணிரத்தினத்துடன் கைகோர்பதாக அறிவித்து இருந்தார். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்துடன் இணையும் இந்த படம் கமலின் 234 வது படமாகும்.
கமல் 234 -ஐ தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்த படம் அரசியல் கதைகளம் கொண்ட படம் அல்ல என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மணிரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதை கூறி, தயாரிப்பு குறித்து உதயநிதியை கமல் அணுகியுள்ளார். முதலில் ஆச்சரியப்பட்ட உதயநிதி, இது அரசியல் படம் அல்ல என்பதை உறுதிப்படுத்திய பிறகு, அவர் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
கமலின் ரீ-என்ட்ரி :
இந்திய திரையுலகின் பன்முக வித்தகராக வலம் வரும் கமல்ஹாசன், மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய பிறகு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார்.
View this post on Instagram
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கமலஹாசன் தற்போது ஹெச்.வினோத்துடனும், மணிரத்தினத்துடனும் சேர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)