மேலும் அறிய

Kajal Aggarwal pregnancy: ஆமா.. கேள்விபட்ட செய்தி உண்மைதான்.. கர்ப்பத்தை உறுதி செய்த காஜல்.. குவியும் வாழ்த்துகள்..!

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமடைந்துள்ளார். 

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமடைந்துள்ளார் என்பது அவரது கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலமாக உறுதியாகியுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை கெளதம் கிச்சலு பதிவிட்டார். அதில், “ 2022 இல் உங்களை பார்க்கிறேன்” என்று பதிவிட்டதோடு, அதன் பக்கத்தில் கர்ப்பம் அடைந்த ஒரு பெண்ணின் எமோஜியை இணைத்திருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)

அதன்  மூலம் காஜல் கர்ப்பமடைந்துள்ளது உறுதியானது. அதனைத் தொடர்ந்து தனது கணவர் கிச்சலுவுடன் இருக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டார்.

அதில், “ பழைய நினைவுகளோடு கண்களை மூடுகிறேன். புதிய தொடக்கத்திற்காக என் கண்களை திறக்கிறேன். புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2021 ஆம் ஆண்டிற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். 2022 ஆம் ஆண்டிற்குள் ஞானம், கருணை, அன்பு ஆகியவற்றுடன் நுழைகிறோம்.” என்று பதிவிட்டார். இதனையடுத்து அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.   

 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

முன்னதாக, தமிழில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தில் நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்த அவர் விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் படங்களிலும், அஜித்துடன் விவேகம் படத்திலும், சூர்யாவுடன் மாற்றான் திரைப்படத்திலும் நடித்தார். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த  இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். ஆனால் கிரைன் விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே காஜல் அகர்வால் கர்ப்பமாகியுள்ளதாகவும், இதனால் அவர் அந்தப் படத்தில் இருந்து விலகியதாகவும் சொல்லப்பட்டது. அண்மையில் துல்கர் சல்மான் உடன்  காஜல் அகர்வால் நடிக்கும் ஹே சினாமிகா  படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த நிலைதான் அவர் தற்போது கர்ப்பமடைந்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget