Jyothika overacting: "வேணும்னே தான் ஓவர் ஆக்டிங் பண்ணேன்; அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது" - 'குஷி' அனுபவம் பகிர்ந்த ஜோ
குஷி படத்தின் வேண்டுமென்றே தான் ஓவர் ஆக்டிங் செய்தேன். அது நல்லா ஒர்க் அவுட் ஆனது. குஷி படத்தில் தனது நடிப்பு பற்றி ஜோதிகா.
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. ஜோ என செல்லமாக அழைக்கப்படும் ஜோதிகா ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும், பேரன்பையும் அபரிதமாக பெற்றவர். பாலிவுட்டில் அறிமுகமான ஜோதிகாவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. 'வாலி' திரைப்படம் மூலம் தமிழில் கௌரவத் தோற்றத்தில் அறிமுகமானவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடர்ந்து சிக்ஸர் அடித்து வந்த ஜோதிகாவின் வட்டமான முகம், கொலு கொலு தோற்றம், அழகான பாவனைகள், க்யூட்டான டான்ஸ் என ரசிகர்கள் விரும்பும் அம்சம் கொண்டவராக இருந்ததால் அவரை கொண்டாடினர்.
ஈகோ பொண்ணு :
2000ம் ஆண்டு விஜய் ஜோடியாக 'குஷி' படத்தில் நடித்தது அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்ததோடு படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஹீரோ விஜய்க்கு நிகரான ஒரு ரோல் என்பதால் நடிக்க எக்கச்சக்கமான ஸ்கோப் கிடைத்ததும் அமர்களப்படுத்தினார் ஜோதிகா. ஈகோ கொண்ட பெண்ணாக நடித்த ஜோதிகா அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி அதை நடிப்பில் வெளிப்படுத்தினார். இன்றும் குஷி படத்தில் நடிகை ஜோதிகா ஓவர் ஆக்டிங் செய்தார் என்ற பேச்சு அடிபட்டாலும் அந்த ரோலுக்கு சிறப்பாக நியாயம் செய்து இருந்தார். இன்னும் சொல்ல போனால் அவரின் ஓவர் ஆக்டிங் தான் மற்ற நடிகைகளிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது. அவரின் சுட்டித்தனமான நடிப்பை ரசித்த ரசிகர்கள் பலர்.
ஓவர் ஆக்டிங் தான் ஆனா ஓகே :
குஷி படத்தில் ஜோதிகாவின் ஓவர் ஆக்டிங் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் பேட்டி கொடுத்து இருந்தார். அப்போது அவர் பேசுகையில் "படத்தின் கதை பற்றி டைரக்டர் சொல்லும் போது பழைய காலத்து ஹீரோக்கள் போல கொஞ்சம் அதிகமாகவே நடிக்க வேண்டும். ஈகோ கொண்ட அனைவருமே கோபமாக மற்றவர்களை பார்த்து லுக் விடுவார்கள். ஆனால் இந்த படத்தில் வேண்டுமென்றே அதை கொஞ்சம் ஓவராக இருக்க வேண்டும் என நினைத்து செய்தது தான். அது ஓவர் ஆக்டிங் இல்லை. பல பேர் இது பற்றி சொன்னதுண்டு. அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாகவே நினைக்கிறேன். முகவரி போன்ற மற்ற படங்களில் அப்படி நடிக்கவில்லை. தமிழ் எனக்கு அந்த அளவிற்கு தெரியாது என்பதால் சில சமயங்களில் நான் ஓவர் ஆக்டிங் செய்து அதை நிரப்புவதற்காக அப்படி நடித்து இருப்பேன். ஒரு நடிகையாக நான் சரியாக செய்கிறேனா இல்லையா என்பது தெரியாததால் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்து அந்த இடத்தை நிரப்ப முயற்சிப்பதுண்டு. ஆனால் ரசிகர்கள் அதை விரும்புவதாலும் எனது அதிர்ஷ்டத்தாலும் அது நல்ல படி ஒர்க் அவுட் ஆகி விடுகிறது" என பேசியிருந்தார் ஜோதிகா
ஜோ எப்படி நடித்தாலும் அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கும். இருப்பினும் அவரின் எக்ஸ்பிரஷன், ஓவர் ஆக்டிங், க்யூட்னஸ் அது தான் அவரின் பிளஸ் பாயிண்ட்.