Antony First Look: ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி.. மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்கால் ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆண்டனியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
![Antony First Look: ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி.. மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்கால் ரசிகர்கள் கொண்டாட்டம் Joju George And Kalyani Priyadarshan Shine In First Look Poster Of Antony know more details here Antony First Look: ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி.. மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்கால் ரசிகர்கள் கொண்டாட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/73af6e8b0a9d8a9e2ff516d68c1be4601688916072851729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் 'ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆண்டனியாக அசத்தும் ஜோஜு ஜார்ஜ்:
ஆண்டனியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாப்பனுக்குப் பிறகு, இயக்குனர் ஜோஷியின் புதிய படமான 'ஆண்டனி' ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிரமாண்ட மாஸ் கெட்-அப்பில் வரும் ஜோஜு ஜார்ஜ் கைதட்டல்களை பெற்று வருகிறார். இந்த படத்திற்காக ஜோஜு ஜார்ஜ் உடல் எடையை மிகவும் குறைத்து உள்ளார். இது மலையாள திரைஉலகில் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜோஷியின் மற்றொரு சூப்பர்ஹிட் படமான பொரிஞ்சு மரியம் ஜோஸ் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜு ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ் விஜயராகவன் ஆகியோர் ஆண்டனி படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு. பொரிஞ்சு மரியம் ஜோஸை விட ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக்கால் ரசிகர்கள் கொண்டாட்டம்:
இப்படத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜோஷி கூட்டணி இணைந்து பணியாற்றிய பொரிஞ்சு மரியம் ஜோஸ் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கட்டாளன் பொரிஞ்சு என்ற கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்து இருந்தார். பொரிஞ்சு மரியம் ஜோஸ் பெரிய வெற்றிக்குப் பிறகு ஜோஜுவும் ஜோஷியும் இணையும் போது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. லாட்டா படத்திற்கு பிறகு ஜோஜு நடிக்கும் படம் ஆண்டனி.
இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். ராஜேஷ் வர்மா எழுத்தில் ராணா டைவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜோயின் இசையில் படம் வெளியாக உள்ளது. ஷிஜோ ஜோசப், கோகுல் வர்மா, கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
மலையாள படங்களில் பிஸியாக உள்ள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)