Jeyam Ravi: அடுத்த அடுத்த க்ரைம் த்ரில்லர்... வெளியாகியது ஜெயம் ரவியின் சைரன் பட முன்னோட்டம் - வீடியோ
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள சைரன் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது
இன்று நடிகர் ஜெயம் ரவி தனது 43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படமான சைரன் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி
1989 ஆம் ஆண்டு வெளியான ஒரு தொட்டில் சபதம் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து எம். குமரன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தும் முதலியப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் நடிகராக உருவானார் ஜெயம் ரவி. இதனைத் தொடந்து பேராண்மை, நிமிர்ந்து நில், தனி ஒருவன் படங்களின் மூலம் சமூக கருத்துக்கள் அடங்கிய படங்களையும் தேர்வு செய்து நடித்து வந்தார். மனிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மணாக நடித்த ஜெயம் ரவி தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனைத் தவிர்த்து அவர் நடித்துள்ளப் படங்கள்தான் சைரன் மற்றும் இறைவன்.
சைரன்
Grateful for your love and support❤️
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2023
Thank you all especially my incredible fans, my family, #Siren team, @antonybhagyaraj , @sujataa_HMM and @theHMMofficial for #SirenPreFace pic.twitter.com/F2yEuCtrE7
அண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஷ்வர் ஆகியோர் நடித்துள்ளார்கள். முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் வயதான கதாபாத்திரம் ஒன்றிலும் இளைஞர் கதாபாத்திரம் ஒன்றிலும் என இரண்டு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் கரியரில் சைரன் திரைப்படம் முக்கியமான ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இறைவன்
'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட வித்தியாசமான படங்களின் மூலம் அஹமத் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கும் நிலையில் யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டதால் ஜெயம் ரவி ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி இறைவன் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.