Jailer: ஜெயிலரில் சுருட்டு பிடிக்கும் ரஜினி.. எதிர்ப்பு எல்லாம் விஜய்க்கு மட்டும்தானா?.. குமுறும் ரசிகர்கள்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் உலகமெங்கும் வெளியாகி உள்ள நிலையில், படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் உலகமெங்கும் வெளியாகி உள்ள நிலையில், படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஜினிகாந்தின் 169வது படமாக உருவான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் என்பதுபோல தியேட்டர்கள் முழுக்க ரசிகர்களால் களைகட்டி வருகிறது. கிட்டதட்ட முன்பதிவில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. ஜெயிலரின் பாடல்கள், ட்ரெய்லர், ஆடியோ வெளியிட்டு விழா என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் நெல்சன் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
#Jailer #JailerFDFS #NelsonDilipkumar #AnirudhRavichander pic.twitter.com/v3I9FnwU2d
— Petchi Avudaiappan (@karthik0728) August 10, 2023
தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்க்ரீனில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக அஜித் நடித்த வலிமை படம் 800க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்ட நிலையில் அதனை ஜெயிலர் படம் முறியடித்துள்ளது. இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினி சுருட்டு பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதேபோல் மோகன்லால், சிவராஜ்குமார் சுருட்டு பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. முதல் பாதியில் ஒரு காட்சியில் ரஜினி மது அருந்துவது போன்ற சீன் வைக்கப்பட்டுள்ளது.
இதன் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து, “ரஜினி புகைப்பிடித்தால் அது நியாயம், அதுவே விஜய் புகைப்பிடித்தால் அது பிரச்சினையா? .. நியாயம் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே” என சரமாரியாக கேள்வியெழுப்பி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் விஜய் நடித்த லியோ படத்தின் நா ரெடி பாடல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரடியாகவே விமர்சித்திருந்தார். மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!