Rajinikanth Jailer Movie: தனது ஊழியர்களுடன் ‘ஜெயிலர்’ படத்திற்கு வந்த தனியார் நிறுவன உரிமையாளர்; தீவிர ரஜினி ரசிகரின் நெகிழ்ச்சி சம்பவம்
ஜெயிலர் படத்திற்கு என் ஊழியர்களுடன் திரைப்படம் பார்க்க வந்துள்ளேன். இது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், முன்னதாக வெளியான பாடல்கள், இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தி விட்டது என்றே சொல்லலாம். ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி பார்த்த ரஜினி பெரிய அளவில் மன மகிழ்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், மதுரையில் அவரது ரசிகர் தனது uno aqua நிறுவனத்தில் பணி செய்யும் தனது ஊழியர்களை விடுமுறை அளித்து ஜெயிலர் படத்திற்கு அழைத்து வந்தார் !#Rajinikanth𓃵 | @UNOAquaticCtr
— arunchinna (@arunreporter92) August 10, 2023
| @abpnadu | @Anitha_Devar | @UnoAqua pic.twitter.com/mviblrbbHg