முதல் படம் டிராப்...8 வருடம் காத்திருப்பு..பீஸ்ட் தோல்வியால் பட்ட அவமானம்..இன்று கமர்சியல் கிங்
Nelson Birthday : முன்னணி கமர்சியல் இயக்குநராக வலம் வரும் நெல்சன் திலிப்குமாரின் முதல் படமே கைவிடப்பட்டது. இன்று அவரது பிறந்தநாள்

நெல்சன் பிறந்தநாள்
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் நெல்சன் திலிப்குமார் இன்று தனது 40 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பல வருட காத்திருப்பும் , கடின உழைப்பையும் கடந்து இன்று தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நெல்சன். அவருக்கு ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நெல்சன் கடந்து வந்த பாதையை ஒருமுறை ரிவிசிட் செய்யலாம்
விஜய் தொலைக்காட்சியில் உதவி இயக்குநர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் நெல்சன் திலிப்குமார். 2010 ஆம் ஆண்டு சிம்பு ஹன்சிகா நடித்து வேட்டை மன்னன் படத்தை இயக்கவிருந்தார். படப்பிடிப்பு தொடங்கி பாதி படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் பிரச்சனையால் இந்த படம் கைவிடப்பட்டது. இதன் பிறகு 8 ஆண்டுகள் நெல்சன் தனது முதல் படத்தை இயக்கவில்லை. இதே கதையை வேறு நடிகர்களை வைத்து 2017 ஆம் ஆண்டு மறுபடியும் இயக்க முயற்சி செய்தார். இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை
கோலமாவு கோகிலா
2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா லீட் ரோலாக நடித்த இந்த படம் டார்க் காமெடி என்கிற ஜானரில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும் பெரிய ஹிட் அடித்தது. மறுபக்கம் சிவகார்த்திகேயன் கரியரில் டாக்டர் குறிப்பிடத் தகுந்த ஒரு படமாக அமைந்தது.
சீரியஸான சிட்டுவேஷன் அதற்கு நேரெதிரான ஹ்யூமர் என நெல்சனின் படங்களுக்கு ஒரு தனித்துவம் இருந்தது. இந்த விதமான் ஹயூமர் அனைத்து தரப்பினருக்கு புதிதாக இருந்தது. நெல்சன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது
பீஸ்ட் தோல்வி
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தபடியாக விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. சமூக வலைதளங்களில் நெல்சன் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். விருது நிகழ்ச்சிகளில் புறக்கனிக்கப்பட்டார். பீஸ்ட் படத்தை அடுத்து அவர் இயக்கவிருந்த ஜெயிலர் படத்தின் மீது விநியோகஸ்தர்களுக்கு பெரிய அவ நம்பிக்கை ஏற்பட்டது. நெல்சனின் கரியரே முடிந்துவிட்ட அளவிற்கு பேச்சு தொடங்கியது
இண்டர்ஸ்ட்ரி ஹிட் அடித்த ஜெயிலர்
பல விமர்சனங்கள் , சந்தேகங்கள் இடையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அனைவரையும் வாயடைக்க வைத்தது. 2.0 படத்திற்கு பின் தமிழ் சினிமாவிலும் சரி ரஜினிக்கும் சரி மிகப்பெரிய வசூல் வெற்றியை கொடுத்தது ஜெயிலர். ஒரு பட தோல்வியால் தன் மேல் இருந்த எல்லா விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார் நெல்சன்.
ஜெயிலர் 2
தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள நெல்சன் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தைவிட பல மடங்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதே டார்க் ஹ்யூமர் , மாஸ் என இந்த படமும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். நெல்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்





















