லட்டுன்னு கூப்பிடுறதுக்கு அம்மா இல்ல.. மனம் வெதும்பி பேசிய ஸ்ரீதேவி மகள்..
உழைக்க வேண்டும் என்ற எனது விருப்பமும், வாழ்க்கையில் நிகழும் சில இழப்புகளையும் சமாளிக்க வழி தேடுவதும் கடினமான ஒன்றாக இருந்தது
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவின் இழப்பை எப்படி கடந்து வந்தார் என்பதை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். தற்போது ஜான்வி கபூர், வருண் தவானுக்கு ஜோடியாக 'பவால்' படத்தில் நடித்து வருகிறார்.
இஷான் கட்டரின் ஜோடியாக 'தடக்' படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஜான்வி தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர். தற்போது அவர் நடித்து வரும் 'பவால்' திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் உருவாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தனது நிஜ வாழ்க்கையில் அவர் சந்திந்த விஷயங்களை பற்றி மனம் திறந்தார். "தடக் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் என்னுடைய அம்மாவை நான் இழந்தேன். அந்த இழப்பை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. உழைக்க வேண்டும் என்ற எனது விருப்பமும் அதே சமயத்தில் நம் வாழ்க்கையில் நிகழும் சில இழப்புகளையும் சமாளிக்க வழி தேடுவதும் கடினமான ஒன்றாக இருந்தது. அதற்கான வழியை கண்டுபிடிப்பது நிச்சயம் மிகப்பெரிய போர்" என்றார்.
ஜான்வியை நடிகை ஸ்ரீதேவி லட்டு என்று தான் அழைப்பாராம். அம்மாவின் நினைவுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக அதிகமான நேரத்தை வேலை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார். அந்த சமயத்தில் என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது எனக்கு மங்கலாகவே இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அது மங்கலாக தோன்றியது என அம்மாவின் இழப்பு குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் ஜான்வி கபூர். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்தார் நடிகை ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
வருண் தவான் - ஜான்வி கபூர் நடிக்கும் நிதேஷ் திவாரியின் 'பவால்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ராஜ்குமார் ராவுடன் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' என்ற ஸ்போர்ட்ஸ் சார்ந்த படத்திலும் திரைப்பட தயாரிப்பாளர் கொரடலா சிவாவின் 'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடனும் நடிக்கவுள்ளார்.