மேலும் அறிய

Indraja Robo Shankar marriage: பிகில் பாண்டியம்மாவுக்கு விரைவில் டும் டும் டும்... முறைமாமனை கரம் பிடிக்கும் ரோபோ ஷங்கர் மகள்

நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா தனது திருமணம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிகாரபூர்வமான தேதி விரைவில் அறிவிக்கப்படும் கூறியுள்ளார். இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் ’கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரோபோ ஷங்கர் வெள்ளித்திரையில் 'தீபாவளி' திரைப்படம் மூலம் அறிமுகமானார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் பின்னர் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். 

Indraja Robo Shankar marriage: பிகில் பாண்டியம்மாவுக்கு விரைவில் டும் டும் டும்... முறைமாமனை கரம் பிடிக்கும் ரோபோ ஷங்கர் மகள்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா. அதனை தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இந்திரஜா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. அவ்வப்போது ரீலிஸ் மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் கார்த்திக் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து மாமா என்ற கேப்ஷனுடன் பகிர்வார். இதனால் அவரின் ரசிகர்கள் பலருக்கும் அவர்கள் இடையே காதலா என்ற கேள்வி எழுப்பி வந்தனர்.  

Indraja Robo Shankar marriage: பிகில் பாண்டியம்மாவுக்கு விரைவில் டும் டும் டும்... முறைமாமனை கரம் பிடிக்கும் ரோபோ ஷங்கர் மகள்

அந்த வகையில் கார்த்திக் இந்திரஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அதற்கு அவரின் ரசிகர் ஒருவர் நீங்கள் இந்திரஜாவை திருமணம் செய்து கொள்ள போறீங்களா? என கேட்டுள்ளார். கார்த்திக் அதற்கு ஆமா... ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. முடிவு செய்ததும் சொல்லறோம்" அதற்கு இந்திரஜாவும் "அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும். இந்த சந்தோஷமான செய்தியை எனது நல விரும்பிகளுடன் நிச்சயமாக பகிர்வோம்" என பதிலளித்து இருந்தார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திராஜாவின் திருமணம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மதுரையை சேர்ந்த கார்த்திக் 'தொடர்வோம்' என்ற பெயரில் தன்னார்வல அறக்கட்டளையின் மூலம் சில குழந்தைகளை வளர்த்து வருகிறார். ரோபோ ஷங்கரின் பூர்வீகமும் மதுரை என்பதால் இவர்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்ததால் உறவினர்களாக இருக்க கூடும் என தெரிகிறது. பெற்றோர்களால் நிச்சயாத திருமணமாக இருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகிறது. சினிமாவில் ஒரு இயக்குநராக வேண்டும் என்பதே கார்த்திக்கின் ஆசை. அவரும் திரைத்துறையில் இணையவே விருப்படுகிறார். இந்திரஜாவும் தற்போது நடிப்பு மற்றும் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவர்களது திருமண தேதி குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget