மேலும் அறிய

Indian 2 Update: “இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்”...இந்தியன் 2 படத்துக்காக கமல் எடுத்த ரிஸ்க்.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2 ஆம் பாகம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியன்  2 குறித்த அறிவிப்பு வெளியானது. 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், விவேக், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில்  கிரேன் கீழே விழுந்து படத்தின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Lyca Productions (@lyca_productions)

தொடர்ந்து நடிகர் விவேக்கின் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது ஆகிய காரணத்தால் இவர்களுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. அதேசமயம் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

இதனால் இந்தியன் 2 படத்தின் துணை கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சிகளை இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் பத்து நிமிடங்கள் வரை ஓடும் ஒரு சிங்கிள் ஷாட் காட்சியை 14 மொழிகளில் கமல்ஹாசன் டேக் எதுவும் எடுக்காமல் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் படப்பிடிப்பில் இருந்து பார்த்த படக்குழுவினர் கமலின் நடிப்பில் மிரண்டு போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
சபாஷ்.! ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டம் மூலம் இதுவரை இவ்வளவு பேருக்கு பயனா.? முதல்வரின் பதிவு
Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
Netanyahu: “நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
“நவீன ரத்த அவதூறு“; காசாவில் பஞ்சம் என அறிவித்த ஐ.நா சபையை சாடிய இஸ்ரேல் பிரதமர்
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
நீயெல்லாம் மனுஷனாடா.?! காசா பெயரில் நிதி திரட்டி மோசடி - சிரியாவை சேர்ந்தவர் குஜராத்தில் கைது
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
TVK Symbol: விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் - லிஸ்டில் இருப்பது என்ன?
Trump New Tariff: ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
ஃபர்னிச்சரை கூட விட்டு வைக்காத ட்ரம்ப்; 50 நாட்களில் வரி விதிக்க இருப்பதாக அச்சுறுத்தல்
Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஆகஸ்ட் 25-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
ஏமாறாமல் சொந்த வீடு, மனை வாங்க ? இதை தெரிஞ்சிக்கோங்க - வழிகாட்டும் ரியல் எஸ்டேட் ஆணையம்
Embed widget