மேலும் அறிய

Indian 2 Box Office: உலக அளவில் ரூ.50 கோடி! ஜெட் வேகத்தில் கமல் - ஷங்கர் கூட்டணி: இந்தியன் 2 முதல் நாள் வசூல் நிலவரம்!

Indian 2 Day 1 Box Office Collection: இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் நாள் வசூல் நிலவரம்

ஷங்கர் - கமல்ஹாசன் மெகா கூட்டணியில் நேற்று உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் இந்தியன் 2 (Indian 2). அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், கமல்ஹாசனுடன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 

சுமார் 250 கோடிகள் செலவில் தயாரான இப்படம், நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டோரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், திரைக்கதை கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், பாடல் காட்சிகளும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

உலக அளவில் ரூ.50 கோடி

இந்தியன் 2 திரைப்படம் நேற்று மதியமே 9 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டதாகவும், அமெரிக்காவில் மட்டும் ரூ.5 கோடியே 80 லட்சங்கள் வசூலித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 29.6 கோடிகளை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12.8 கோடிகளையும், கர்நாடகாவில் 3.45 கோடிகளையும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 9.45 கோடிகளையும், கேரளாவில் 2.3 கோடிகளையும், பிற பகுதிகளில் 1.6 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உலக அளவில் சுமார் 54. 6 கோடிகளை இந்தியன் 2 வசூலித்துள்ளதாகவும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை நாள்களை ஒட்டி வசூல் தொகை எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் வெளியாகும் இந்தியன் 3

நேற்று வெளியான இந்தியன் 2 திரைப்படத்துடன் இந்தியன் 3 திரைப்படத்தின் ட்ரெய்லரும் இடம்பெற்றிருந்தது. நடிகர் கமல்ஹாசன் தனக்கு இந்தியன் 3 கதை தான் மிகவும் பிடித்திருந்ததாக பட ப்ரொமோஷன்களில் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 3 திரைப்படம் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தில் சில காட்சிகளிலேயே தோன்றிய நடிகை காஜல் அகர்வாலின் பாத்திரம் இந்தியன் 3 படத்தில் சிறப்பாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் 3 இந்த இரண்டு பாகங்களின் வசூலும் சேர்த்து லைகா ப்ரொடக்‌ஷனின் முந்தைய வசூல் சாதனையான பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்களின் வசூலை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
Embed widget