’பெண் குழந்தையாக பிறந்ததால் தேவையற்றவளாக கருதப்பட்டேன்.. இன்று மிக அவசியமானவள் நான்’ - கங்கனா ரனாவத்
நான் ஒரு தேவையற்ற பெண் குழந்தை. ஆனால், இன்று எனது தேவை மிகவும் உள்ளது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில், கங்கனாவின் இடைவிடாத ஆற்றல், இடைவிடாத உழைப்பில் அற்புதமான படங்களைக் கொடுப்பதும், கொரோனா காலத்திலும் கடினமான உழைப்பு ஆகியவற்றுக்காக கங்கனா கண்டிப்பாக விருதுகளை பெறவேண்டும். இளம் நடிகர்கள் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I was an unwanted girl child, today I work with best and passionate filmmakers, artists and technicians. I love my work, not for money, not for fame. When best of the world look at me and say ‘only you can do it’ I know I may have been unwanted but I was needed. Much needed ❤️ <a href="https://t.co/BZKnPUfXfI" rel='nofollow'>https://t.co/BZKnPUfXfI</a></p>— Kangana Ranaut (@KanganaTeam) <a href="https://twitter.com/KanganaTeam/status/1376049490675658754?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 28, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த கங்கனா ரனாவத், ”நான் பெண்ணாக பிறந்ததால் தேவையற்றவளாக கருதப்பட்டேன். ஆனால், இன்று நான் திறமையான, சிறந்த கலைஞர்களுடனும், படைப்பாளர்களுடனும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் பணியாற்றுகிறேன். நான் என்னுடைய பணியை நேசிக்கிறேன். பணத்திற்காகவோ, புகழுக்காகவோ அல்ல. உலகின் சிறந்தவர்கள் என்னை பார்க்கும்போதும், அவர்கள் உன்னால் மட்டும்தான் முடியும் என்று சொல்வதாலும் என் பணியை நேசிக்கிறேன். நான் தேவையில்லாதவளாக கூட இருந்திருக்கலாம். ஆனால், நான் இப்போது தேவைப்படுகிறேன். மிகவும் தேவைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.