Tom Cruise : மிஷன் இம்பாஸிபிள் 2 டெட் ரெக்கனிங் பார்ட் 2 : ப்ளேன் ஸ்டன்டில் கலக்கும் டாம் க்ரூயிஸ்..
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். இன்றும் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனல் ஹீரோ தான். அவர் தற்போது மிஷன் இம்பாஸிபிள் 2 டெட் ரெக்கனிங் பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அவருடைய ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். இன்றும் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனல் ஹீரோ தான். அவர் தற்போது மிஷன் இம்பாஸிபிள் 2 டெட் ரெக்கனிங் பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அவருடைய ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டுள்ளது.
ஆம் ஒரு பை ப்ளேனில் டாம் க்ரூஸ் அமர்ந்திருக்கிறார். அவர் ரொம்பவே கூலாக அமர்ந்து கொண்டு வசனங்களைப் பேசுகிறார். அப்போது அருகே ஒரு மஞ்சள் நிற ப்ளேன் வருகிறது. அப்போதும் அவர் வசனங்களைப் பேசுகிறார். இடையில் இயக்குநர் நமக்குத் தேவையான பகல் நேர வெளிச்சம் மங்கி வருகிறது எனக் கூறுகிறார். அதன்பின்னர் அவர் அமர்ந்திருந்த ப்ளேனில் இருந்தவாறே பைபை சொல்கிறார் விமானம் அப்படியே கீழ் நோக்கிப் பாய்கிறது. பார்க்கும் போது தோழா படத்தில் கார்த்தி டேய் என்னை விட்டுடுங்கடா என்று பாரா க்ளைடிங் செல்ல மறுத்து கத்துவது போல் நமக்கு கத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மனிதன் சர்வ சாதாரணமாக கீழே விமானத்தில் அமர்ந்தபடி ஒரு கையில் மட்டும் பாதுகாப்புக்கு இரும்பு ரிக் கட்டியபடி பாய்ந்து செல்கிறார். உண்மையான மாஸ் ஹீரோ தான் என்று சொல்லத் தோன்றுகிறது.
I just really love Tom Cruise okay pic.twitter.com/DTDk5erIsR
— Stephen Ford (@StephenSeanFord) September 5, 2022
60 வயதான டாம் க்ரூஸ் தனது திரைப்படத்தின் பல ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். 'மிஷன் இம்பாசிபிள்' படங்களின் சண்டைக் காட்சிகள் அதற்கு ஒரு சான்று. 'மிஷன் இம்பாசிபிள்' பட வரிசையின் 'கோஸ்ட் ப்ரோட்டாகால்' என்ற பாகத்தில் ஒரு காட்சிக்காக, துபாயின் பூர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஏறினார். 2018-ம் ஆண்டு, 'ஃபால் அவுட்' பாகத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்குத் தாவும்போது அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படப்பிடிப்பு சில வாரங்கள் தடைப்பட்டது.
2018-ம் ஆண்டு, 'ஃபால் அவுட்' பாகத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்குத் தாவும்போது அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படப்பிடிப்பு சில வாரங்கள் தடைப்பட்டது. இதுதான் அவர் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம்.
இப்போது டாம் க்ரூஸின் இந்த ப்ளேன் ஸ்டன்ட் வைரலாகி வருவதால் இதன் மீதான எதிர்பார்பு மிகவும் அதிகரித்துள்ளது.