மேலும் அறிய

Kenneth Mitchell : சோகத்தில் ஆழ்ந்த ஹாலிவுட் திரையுலகம்...மார்வெல் நடிகர் கென்னத் மிச்செல் திடீர் இறப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி

மார்வெல் படத்தில் நடித்த பிரபல நடிகர் கென்னத் மிச்செல் உரியிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கேப்டன் மார்வெல் படத்தில் காரெல் டென்வர்ஸுக்கு தந்தையாக நடித்த கென்னத் மிச்செல் தனது 49 வயதில் உயிரிழந்துள்ள நிகழ்வு ஹாலிவுட் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கென்னத் மிச்சல்

கேப்டன் மார்வெல் படத்தில் காரெல் டென்வர்ஸுக்கு தந்தையாக நடித்தவர் கென்னத் மிச்சல். ஸ்டார் ட்ரெக் போன்ற சூப்பர் ஹீரோ படங்களில் நடித்தவர் . நவம்பர் 25, 1974 இல் கனடாவின் டொராண்டோவில் டயான் மற்றும் டேவிட் மிட்செல் ஆகியோருக்குப் பிறந்தார் அவர்.
கென் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராக பரவலாக அறியப்பட்டார்.  ‘அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ்’ என்கிற  நரம்பியல் தொடர்புகள் செயலிழந்து போகும்  நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார் கென்னத்.  இந்த நோயுடன் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வந்த அவர் கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு ஹாலிவுட் திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். கென்னத்தின் இறப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில்..

எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு சிறந்த தந்தை

”கென்னத் அலெக்சாண்டர் மிட்செல் காலமானதை உங்களுக்கு கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். ஒரு அன்பான அப்பாவாக, கணவனாக, சகோதரனாக,  மகனாக மற்றும் பலருக்கு அன்பான நண்பனாக அவர் இருந்துள்ளார். ஒரு நடிகராக பல கதாபாத்திரங்களாக அவர் வாழ்ந்துள்ளார். பேரழிவில் தப்பிய ஒருவராக , ஒரு விண்வெளி வீரராக, ஒரு சூப்பர் ஹீரோவாக  ஸ்டார் ட்ரெக் பட நாயகனாக அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களிடம் அவருக்கு வேறு சில முகங்கள் இருக்கின்றன. நம்பிக்கையான மனிதனாக, பகல் கனவு காண்பவர், கால்பந்து வீரர், கடற்கரையில் நடைபயணம் செல்வது, தோட்டம் வளர்ப்பவர்,  இயற்கை ஆய்வாளர், பூனை பிரியர், பரிசு வழங்குபவர், கடிதம் எழுதுபவர், உற்சாகமாக திரைப்படங்களைப் பார்க்கச் செல்பவர்,  இசை ரசிகர், விளையாட்டு ஆர்வலர், விரிவான , இளைய சகோதரர் இது எல்லாவற்றையும் வித ஒரு பெருமையான தந்தையாக அவர் இருந்திருக்கிறார்.

கென்னி எண்ணற்ற  நட்புறவுகளை தன்னைச் சுற்றி காப்பாற்றி வந்தார். ஒரு பெரிய நட்சத்திரம் போல தூய்மையான கருணையை வெளிப்படுத்துபவர். ஒருமுறை அவரது வட்டத்திற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்றால்  நேசிக்கத் தகுதியான ஒருவராக உங்களை அவர் உணரவைப்பார். அவருக்கே உரிய ஒரு நகைச்சுவை உணர்வு அவரிடம் இருந்தது . கென் கொடுத்து பழகியவர், மற்றவர் சொல்வதை பொறுமையாக கேட்பவர், உணர்ச்சிவசப்படுபவர் மற்றும் தன்னை சுற்றி இருக்கும் சூழலைப் பற்றி நன்றாக அறிந்த ஒருவராக அவர் இருந்தார். மற்றவர்கள் பிரகாசமாக சிரிக்க ஆசைப்படுவது அவரது மிகவும் அன்பான குணங்களில் ஒன்று . அவர் நண்பர்களை ஒன்றாக இணைக்கும் ஒரு பாலமாக எப்போதும்  இருந்தார்.” என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget