(Source: ECI/ABP News/ABP Majha)
Amala Paul: ‛இவனை ஏண்டா லவ் பண்ணோம்னு பீல் பண்ணேன்...’ போட்டு உடைத்த அமலா பால்!
ராஜூ அவரிடம் டாஸ்க் ஒன்றில், “வாழ்க்கையில் லவ் பண்ணி ஜாலியாக போய்ட்டு இருக்கும் போது இவனை ஏண்டா லவ் பண்ணுனோம் என நினைக்கிற அளவுக்கு ஏதும் சம்பவங்கள் இருக்கா?” என கேட்கிறார்.
வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் எது என்பது குறித்து நடிகை அமலாபால் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து வித்தியாசமாகவே இருக்கும். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி பார்வையாளர்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுகின்றனர்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் “ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரம் ஒளிபரப்பான எபிசோடில் பார்ட்டிக்கு நடிகைகள் ரேஷ்மா பசுபுலேட்டி, பிக்பாஸ் ஜூலி, கேபிரியல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
Heart break is the best biggest lessons.. 🔥
— Vijay Television (@vijaytelevision) August 1, 2022
ராஜு வூட்ல பார்ட்டி - ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajuVootlaParty #VIjayTelevision pic.twitter.com/yW85S9Lvck
நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது ராஜூ அவரிடம் டாஸ்க் ஒன்றில், “வாழ்க்கையில் லவ் பண்ணி ஜாலியாக போய்ட்டு இருக்கும் போது இவனை ஏன்டா லவ் பண்ணுனோம் என நினைக்கிற அளவுக்கு ஏதும் சம்பவங்கள் இருக்கா?” என கேட்கிறார். அதற்கு அமலாபால், அப்படி ஃபீல் பண்ணிருக்கேன்.
எல்லாருக்குமே நடக்குற மாதிரி தான். ஆரம்பத்துல நடக்குற விஷயங்கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் போக போக சரியாகும் என நினைத்தேன். ஆனால் லேட்டா தான் புரிஞ்சிது. எதுவும் இங்கே மாறாது. யாருக்காகவும் யாரும் மாற முடியாது என தெரிவிக்கிறார். வாழ்க்கையில் காதல் தோல்வி என்பது மிகப்பெரிய பாடம் எனவும் அமலா பால் கூறியுள்ளார். இதனைக் கேட்ட ராஜூ கிட்டதட்ட சாமியார் போலவே நீங்கள் பேசுறீங்க என தெரிவிக்கிறார்.
முன்னதாக தலைவா படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் ஏ.ஏல்.விஜய்யும், அமலாபாலும் காதலிக்க தொடங்கினர். பின்னர் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் 2017 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.