மேலும் அறிய

HBD Nayanthara: ”என் உயிர், உலகமே” .. நயன்தாராவிற்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாராவிற்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கணவர் விக்னேஷ் சிவன் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகை நயன்தாராவிற்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கணவர் விக்னேஷ் சிவன் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் ”லேடி சூப்பர் ஸ்டார்”  ஆக கொண்டாடப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகைத்தாய் மூலம் கடந்தாண்டு அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் -  உலக் தெய்வக் என பெயர் சூட்டப்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதேபோல் விக்னேஷ் சிவனும் நயன் மற்றும் குழந்தைகள் படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். இப்படியான நிலையில் நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இப்படியான நிலையில் நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா பிறந்தநாளுக்கு கேக் வெட்டப்படுகிறது. அதில் “என் உயிர் மற்றும் உலகமே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நயன்தாராவின் சினிமா வாழ்க்கை

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த டயானா குரியன், 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஐயா படத்தின் மூலம் நயன்தாராவாக மக்களுக்கு அறிமுகமானார். தனது 2வது படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகி திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஜெய், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின்,கார்த்தி, சூர்யா என தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். 

அதேசமயம் தனிப்பட்ட ஹீரோயினை மையப்படுத்திய கதைகளிலும் நடிக்கத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டு “தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதற்கிடையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி நடைப்போட்டு வருகிறார் நயன்தாரா..!

மேலும் படிக்க: Singapenne: எதிர்நீச்சல் சீரியலை ஓரம் கட்டிய சிங்கப்பெண்ணே... முதல் மாதத்திலேயே அடி தூள் தான்...!

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget