Hansika Motwani: ‘வேர் இஸ் த பார்ட்டி’ - தோழிகளுடன் மஜாவாக ஊர் சுற்றும் ஹன்சிகா... - வைரலாகும் வீடியோ..!
பிரபல நடிகையான ஹன்சிகா தனது தோழிகளுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடியது, தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே டிசம்பர் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
View this post on Instagram
இதனையடுத்து, கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் திருமண செய்தி உறுதியானதால் ஹன்சிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முன்னதாக, டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் தொடங்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சொல்லப்படும் நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும்,ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வைத்து டிசம்பர் 4 ஆம் தேதி திருமண நிகழ்வும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்திய மற்றும் வெளிநாடு ஆகிய கலாச்சாரம் அடங்கிய அழைப்பதழ்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாம். இந்நிலையில் நவம்பர் 22 ஆம் தேதி ஹன்சிகா மற்றும் சோஹேலின் திருமணத்திற்கு முந்தைய மத சடங்குகள் (Mata Ki Chowki) கோலாகலமாக தொடங்கியது.
Bride-to-be #HansikaMotwani was glowing with her man #SohaelKhaturiya. pic.twitter.com/5jJjFCqGqV
— Circle Of Bollywood (@CircleBollywood) November 23, 2022
சிவப்பு நிற உடையில் மணமக்கள் இருவரும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது, ஹன்சிகா கல்யாணத்திற்கு முன்னதாக தனது தோழிகளுக்கு பார்ட்டி வைத்திருக்கிறார். கிரீஸ் நாட்டு தெருக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் ஜாலியாக தொழிகளுடன் பார்ட்டியை கொண்டாடிய ஹன்சிகா, அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தான் கொண்டாடிய சிறந்த பேச்சுலர் பார்ட்டி என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.





















