மேலும் அறிய

மகேந்திரனுக்காக சூப்பர் பாடல்.! ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் ஷிவாங்கி ..!

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் அமிகோ கேரேஜ் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஷிவாங்கி இணைந்து ஒரு மெல்லிசைப் பாடலைப் பாடவுள்ளனர்.

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் அமிகோ கேரேஜ் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஷிவாங்கி இணைந்து ஒரு மெல்லிசைப் பாடலைப் பாடவுள்ளனர்.

மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக அவரது குறும்பு நடிப்பை நாம் ரசித்தோம். தற்போது ஹீரோவாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். அண்மையில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார்
அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜ் இயக்கும் அமிகோ கேரேஜ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பாடலை அண்மையில் தேனிசைத் தென்றல் தேவா பாடிய செய்தி ஊடகங்களின் வெளியாகின. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின். தேனிசைத் தென்றல் தேவாவின் குரலுக்கு என தனி பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்களுக்கு மாஸாக கிளாஸாகப் பாடல்களைக் கொடுத்த தேவா தேனிசைத் தென்றல் என்ற பட்டத்தைப் பெற்றார்.

மகேந்திரனுக்காக சூப்பர் பாடல்.! ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் ஷிவாங்கி ..!

இந்நிலையில் இப்படத்தில் ஒரு மெல்லிசைப் பாடல் இடம்பெற்றிருப்பதாகவும். அதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், விஜய் டிவி சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியும் பாடவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமிகோ கேரேஜ் திரைப்படத்தை பீப்பிள் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்து வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மகேந்திரன் நடிப்பில் அறிண்டம், அர்த்தம் ஆகிய படங்களும் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.

மகேந்திரனுக்காக சூப்பர் பாடல்.! ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் ஷிவாங்கி ..!

மகேந்திரனின் நடிப்புப் பயணத்தில் அமிகோ கேரேஜ் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் படக்குழு கூறுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் இளைஞரின் வாழ்க்கையை கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்ல முற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனுடன் ஜிஎம் சுந்தர் தசரதி, தீபா பாலு, அதிரா ராஜ், முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார்.  ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர். இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, கு.கார்த்திக் படத்தின்  அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார்,விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget