GOAT Box Office Collection: முதல் வீக் எண்ட் ஓவர்- விஜயின் தி கோட் பட வசூல் நிலவரம் என்ன? 2வது வாரம் தாங்குமா?
GOAT Box Office Collection: விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 150 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
GOAT Box Office Collection: விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் மொத்தமாக 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
முதல் வாரத்தை கடந்த ”தி கோட்”
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன்று அன்று வெளியான இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் 25 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வசூல் குறைந்தது. இருப்பினும், பொது விடுமுறையான கடந்த இரண்டு நாட்களிலும் தி கோட் படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்தது. இதனால், முதல் நான்கு நாட்களிலேயே தி கோட் படத்தின் உள்நாட்டு வசூல், சுமார் ரூ.150 கோடியை நெருங்கியுள்ளது.
நான்காவது நாள் வசூல் நிலவரம்:
Sacnilk இணையதள தரவுகளின்படி, வெளியான நான்காவது நாளான நேற்று தி கோட் திரைப்படம் இந்தியாவில் மொத்தமாக 34.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் தமிழ் வெர்ஷனில் 30 கோடி ரூபாயும், இந்தி வெர்ஷனில் 2.7 கோடி ரூபாயும் மற்றும் தெலுங்கு வெர்ஷனில் 1.5 கோடி ரூபாயும் அடங்கும். சனிக்கிழமையை காட்டிலும் 2 சதவிகிதம் அளவிற்கு வசூல் அதிகரித்துள்ளது.
ரூ.150 கோடியை நெருங்கும் தி கோட் பட வசூல்:
அதன்படி, முதல் நான்கு நாட்களில் தி கோட் திரைப்படம் உள்நாட்டு சந்தையில் மட்டும் 137.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதில் தமிழ் வெர்ஷன் மட்டுமே 110 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் வசூல் - ரூ. 44 கோடி (தமிழ் - ரூ.39.15 கோடி, இந்தி - ரூ.1.85 கோடி, தெலுங்கு - ரூ.3 கோடி)
2வது நாள் வசூல் - ரூ.25.5 கோடி (தமிழ்:- ரூ.22.75 கோடி, இந்தி - ரூ.1.4 கோடி, தெலுங்கு - ரூ.1.35 கோடி)
3வது நாள் வசூல் - ரூ.33.5 கோடி (தமிழ் - ரூ.29.15 கோடி, இந்தி - ரூ.2.35 கோடி, தெலுங்கு - ரூ.2 கோடி
4வது நாள் வசூல் - ரூ.34.2 கோடி ( தமிழ் - ரூ.30 கோடி, இந்தி - ரூ. 2.7 கோடி, தெலுங்கு - ரூ.1.5 கோடி) தோராயமான தரவு
மொத்த வசூல்: ரூ.137.2 கோடி [தமிழ் - ரூ.121.05 கோடி, இந்தி - ரூ. 8.3 கோடி, தெலுங்கு - ரூ. 7.85 கோடி
சாக்னிக் ஆன்லைன் டிக்கெட் விற்பனை அடிப்படையில் வசூலை கணிக்கிறது. பி மற்றும் சி செண்டர் திரையரங்குளில் டிக்கெட்கள் இன்னும் நேரடியாகவே விற்கப்படுவதால், Sacnilk குறிப்பிடுவதை காட்டிலும் படத்தின் வசூல் சற்று அதிகமாகவே இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2வது வாரம் தாங்குமா?
இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. வார இறுதியை தொடர்ந்து தி கோட் திரைப்படத்தின், சர்வதேச ஒட்டுமொத்த வசூல் சுமார் 250 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களே வருவதால், இரண்டாவது வாரத்திலும் தி கோட் திரைப்படம் நிலைத்து நின்று வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.