மேலும் அறிய

Gautham Vasudev Menon: பிரபல தெலுங்கு ஹீரோவுடன் இணையும் கெளதம் மேனன்! - எப்போ ஷூட்டிங் - விபரம் உள்ளே!

நடிகர் ராம் பொத்தினேனி இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் ராம் பொத்தினேனி இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில்  புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். 

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்  ‘ராம் பொத்தினேனி’. ‘தேவதாசு’ படம் மூலமாக அறிமுகமான நடிகனாக அறிமுகமான  அவர்  ‘ஜகடம்’   ‘ரெடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.  இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ தி வாரியர்’ படம் மூலமாக தமிழிலும்  அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இவர் தற்போது இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by RAm POthineni (@ram_pothineni)

தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இந்த அறிவிப்பை உறுதி செய்ததுடன், அடுத்த வருடம் இந்தப்படம் தொடர்பான பணிகள் தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாகவும் இது இருக்கும் என்று கூறிய அவர் தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலமாக இருந்து வருவதையும் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Gautham Menon (@gauthamvasudevmenon)

‘வெந்து தணிந்தது காடு’  படத்தை  ஸ்ரவந்தி மூவிஸ்ஸின் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தெலுங்கில்  ‘தி லைஃப் ஆஃப் முத்து’  என்ற பெயரில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படமானது இன்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

முழு விமர்சனத்தை படிக்க>> Vendhu Thanindhathu Kaadu Review: வேக்காடா? அரை வேக்காடா? ‛வெந்து தணிந்தது காடு... விமர்சனம் தரும் ABP நாடு!’

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget