Vijay: இது என்ன தளபதிக்கு வந்த சோதனை? விஜய்யிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண் - நெல்லையில் ருசிகரம்
நடிகர் விஜய்யை அடையாளம் தெரியாமல் அவரிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தென்மாவட்ட கனமழை:
வரலாறு காணத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பலரும் தங்களது வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கான இடமும் இல்லாமல் அடிப்படை வாழ்வாதரத்தை கூட இழந்து தவித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பின் ரூ 6000 வழங்கப்பட்டது. இதனைத்
இதனிடையே நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்ற அவர் பின் அங்கிருந்து கார் மூலம் நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கேடிசி நகர் பகுதியில் உள்ள மாதா மாளிகை எனப்படும் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். கிட்டத்தட்ட ஆயிரம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார்
நான் தான் விஜய்
View this post on Instagram
விஜய்யை அடையாளம் தெரியாமல் நின்ற பெண்:
விஜய்யிடம் வெள்ள நிவாரண பொருட்களைப் பெற்றுக் கொண்டு மக்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அப்போது விஜய்யிடம் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த பெண் விஜயிடன் சென்று விஜய் எங்கே என்று கேட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேடை வந்த அந்த பெண் பரபரப்பாக விஜய்யை தேடியபடியே இருக்க நிவாரணப் பொருட்களுடன் விஜய் நிற்பதை அவர் கவனிக்காமல் சென்றார். அதற்கு பின் விஜய்யிடன் சென்று பொருட்களை வாங்கிக் கொண்ட அவர் விஜய் எங்கே என்று கேட்கிறார். அதற்கு நான் தான் விஜய் என்று விஜய் கூறியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

